புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மே, 2015

தேய்பிறையில் முதல்வராக பதவியேற்கும் ஜெயலலிதா: அமைச்சரவையில் மாற்றம்?

தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா வரும் 15ம் திகதி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

15ம் திகதி தேய்பிறையாக இருந்தாலும் வைகாசி பிறப்பு முகூர்த்த நாளாக இருப்பதால், அந்த திகதியில் முதல்வராக பதவியேற்க ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அந்த தினத்தில் அமைச்சரவையில் சிறிய அளவிலான மாற்றம் இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரையும் சென்னைக்கு வருமாறு கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
இந்நிலையில் ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மே 13ம் திகதி, எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் எனத் தெரிகிறது.
இதில், அதிமுகவின் சட்டப்பேரவை குழு தலைவராகவும், முதல்வராகவும் ஜெயலலிதாவை அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒரு மனதாகத் தேர்வு செய்யவுள்ளனர்.
பின்னர் தமிழக ஆளுநர் கே.ரோசய்யாவைச் சந்தித்து, முதல்வர் தேர்வுக்கான கடிதத்தை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கொடுப்பார்கள்.
இதனிடையே 2011 மே 16ம் திகதி, அதிமுக ஆட்சிக்கு வந்த நாள் என்பதால், சரியாக 4 ஆண்டுகள் முடிந்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நேரத்தில் ஆட்சியில் முதல்வராக அமர்ந்திருக்க வேண்டும் என்று ஜெயலலிதா நினைப்பதாகவும் கூறப்படுகிறது.

ad

ad