புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மே, 2015

முடிந்தால் 113 எம்.பிக்களைத் திரட்டிக் காட்டுங்கள்: மஹிந்த அணிக்கு ஐ.தே.க சவால்

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமர் வேட்பாளாராக நிறுத்த முயற்சிப்போரால் நாடாளுமன்றத்தில் 113 பேரின்
ஆதரவையாவது திரட்டிக்காட்ட முடியுமா?" என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் கல்வி அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் மஹிந்த ஆதரவு குழுவினருக்கு சவால் விடுத்துள்ளார்.
 
"மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஜெனிவாவுக்குச் செல்வதனை தேசத் துரோகமாகக் கருதிய மஹிந்த ஆதரவுக் குழுவினர், ஊழல் மோசடி செய்தோரை கைது செய்கின்றமைக்காக தற்போது ஜெனிவா செல்ல நினைப்பது தேசத்துரோகம் இல்லையா?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
"நாட்டு மக்களின் ஆணையின் பிரகாரம் நாடாளுமன்றம் வெகுவிரைவில் கலைக்கப்படும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி உறுதியானது" என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் கல்வி அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்படி விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad