புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மே, 2015

ஜெ. வழக்கு தீர்ப்பில் குளறுபடி: நீதிபதியிடம் முறையிட சென்ற வழக்கறிஞர் மாயமா?

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பில் உள்ள கணக்கின் தவறை சுட்டிக் காட்டி, கர்நாடக தலைமை நீதிபதியிடம் முறையிட சென்ற உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மாயமானதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுத்த நீதிபதி குமாரசாமி அளித்துள்ள தீர்ப்பை திரும்ப பெற வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வலியுறுத்த இருப்பதாக உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் கூறுகையில், சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்துள்ள தீர்ப்பில் ஜெயலலிதா உள்ளிட்டோர் வங்கிகளில் இருந்து வாங்கிய கடன் தொகை கூட்டலில் தவறு நடந்து இருப்பது அம்பலமாகி உள்ளது. இதன் மூலம் வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சேர்த்த சொத்து 8 சதவீதத்தில் இருந்து 76 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கிருஷ்ணமூர்த்தி கூறினார். 

வருமானத்திற்கு அதிகமாக 10 சதவீதம் அளவு சொத்துக்களை அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கொள்காட்டியே ஜெயலலிதா உள்ளிட்டோரை குமாரசாமி விடுவித்து இருப்பதால், தற்போது அந்த தீர்ப்பு செல்லுமா என கேள்வி எழுந்துள்ளதாக கூறிய, கிருஷ்ணமூர்த்தி குமாரசாமியின் தீர்ப்பை திரும்ப பெறக் கோரி கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட இருப்பதாக தெரிவித்திருந்தார்.

நீதிபதி குமாரசாமியை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வலியுறுத்தயிருப்பதாகவும் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறியிருந்தார்ர்.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அளிக்கும் பதிலின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தை நாடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி திடீரென மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீர்ப்பில் உள்ள கணக்குப் பிழை குறித்து கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிடச் சென்ற வழக்கறிஞரை திருப்பத்தூரில் வைத்து தமிழக காவல்துறையினர் மடக்கிப் பிடித்ததாக தகவல் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் தெரியவரவில்லை. 

இதனால் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி குறித்து மர்மம் நீடிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ad

ad