புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2015

ஜெ.வுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது: ஆளுநர் ரோசய்யாவிடம் இருவர் நேரில் மனு


நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை ஜெயலலிதாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என்று ஆளுநர் ரோசய்யாவிடம் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியும், தமிழகத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தியும் சனிக்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர்.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு முரண்பாடுகள் நிறைந்ததாக இருப்பதால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை ஜெயலலிதாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என டிராஃபிக் ராமசாமி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தப்போது தெரிவித்தார்.

ஜனாதிபதி, பிரதமர், தலைமை நீதிபதிக்கும் மனுவின் நகல் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் நகல் அனுப்பப்பட்டுள்ளது என வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ad

ad