புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூன், 2015

வெப்பக் காலநிலை காரணமாக 450 பேர் உயிரிழப்பு பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்


பாகிஸ்தான் பிரதமரால் இன்று அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு நிலவும் அதிக வெப்பம்
காரணமாக அந்நாட்டின் தென் சிந்த் மாகாணத்தில் இதுவரை 450 பேர் உயிழிந்துள்ளனர்.
பிரமதமரின் இவ்வறிவிப்பை ஏற்று அந்நாட்டு தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத்தினரும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நடவடிக்கைகளுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.
கராச்சி நகரிலேயே அதிகளவான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதோடு அங்கு சுமார் 45 பாகை (113 பரனைட்) வெப்பம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெப்பத்தை ஈடுசெய்யும் நோக்கில் அதிகளவான குளிரூட்டிகள் பயன்படுத்தப்படுவதனால் மின்சாரத் தேவையும் அதிகரித்துள்ளது. அத்துடன் அங்குள்ள மக்கள் பகல் வேளையில் நோன்பு கடமையில் ஈடுபட்டிருப்பதால் இந்நிலை மிக மோசமாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்தோரில் பெரும்பாலானோர் வயதானவர்கள் என்பதோடு, குறைந்த வருமானம் பெறுவோர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

ad

ad