23 ஜூன், 2015

நாளை மாலை நாடாளுமன்றம் கலைக்கப்படும்!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாளை நாடாளுமன்றத்தை கலைக்கலாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் அரசியல்வாதிகளிடம் இதனைத் தெரிவித்துள்ளதாக ஆங்கில இணையம் ஒன்று தெரிவித்துள்ளது.
நாளை மாலையளவில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்று, புதிதாக அமைக்கப்பட்ட மனோ கணேசன், அமைச்சர் திகாம்பரம், இராஜாங்க அமைச்சர் ராதாகிருஸ்ணன் ஆகியோரை கொண்ட குழுவிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான 20வது சீர்திருத்தம் தொடர்பில் இணக்கம் ஏற்படாத நிலையிலேயே ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை அறிவிக்கவுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 20வது திருத்தம் தொடர்பில் தற்போது நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு விவாதம் நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது