புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2015

கொள்ளையர்களை பிடிப்பது போல் நடிக்கும் பொலிஸார்: வேலணை பிரதேச செயலர் குற்றச்சாட்டு

யாழ்.தீவகம், மண்கும்பான் பகுதியில் மணல் கொள்ளை அதிகரித்திருக்கும் நிலையில் மணல் கொள்ளையர்களை பிடிக்கப்போகும் பொலிஸார், கொள்ளையர்களை பிடிக்காமல் பிடிப்பதுபோன்று நடிக்கிறார்கள் என வேலணை பிரதேச செயலர் குற்றஞ்சாட்டியுள்
ளார்.இன்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு கூட்டத்திலேயே குறித்த குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார்.
இதன்போது குறிப்பிடுகையில்,
மண்கும்பான் பகுதியில் மணல் கொள்ளை அதிகளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்தநிலையில் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் முறைப்பாடு கொடுத்தால் நாங்கள் மணல் கொள்ளையர்களுடன் சேர்த்து பொலிஸாரையும் கண்காணிக்க வேண்டியுள்ளது என குற்றச்சாட்டை முன்வைத்தார்.
எனவே ஊர்காவற்றுறை பொலிஸாரை இனிமேல் அழைக்க முடியாது. யாழ்.பொலிஸ் நிலையத்திலிருந்து பொலிஸாரை அனுப்புங்கள். ஊர்காவற்றுறை பொலிஸார் கொள்ளையர்களை பிடிக்காமல் பிடிப்பதுபோன்று நடிக்கிறார்கள் என குற்றஞ்சாட்டினார்.
இதனையடுத்து, புதிதாக கடமை ஏற்றுள்ள பொலிஸ் அதிகாரி தலைமையில் குறித்த கொள்ளையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதமும் வழங்கப்பட்டுள்ளது.
  
   

ad

ad