புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூலை, 2015

மெதமுலன கூட்டத்தில் சு.க முன்னாள் எம்.பிக்கள் 20 பேரே பங்கேற்பு அமைச்சர்கள் பங்குபற்றாமை ஏமாற்றம்


மெதமுலனவில் நடைபெற்ற கூட்டத்தில் சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என மஹிந்த
எதிர்பார்த்தபோதும் இறுதியில் அவருக்கு ஏமாற்றமே எஞ்சியதாகத் தெரியவருகிறது.
நேற்றைய கூட்டத்தில் சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான நிமல் சிறிபால.டி.சில்வா, அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் கலந்துகொண்டு தனக்கு ஆதரவு வழங்குவார்கள் என மஹிந்த எண்ணியிருந்தபோதும் அவர்கள் கலந்துகொள்ளாமை குறித்து அவர் ஏமாற்றமடைந்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியை அழைப்பு விடுவதற்காக 100ற்கும் அதிகமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மெதமுலன செல்லவிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் முன்னர் அறிவித் திருந்தனர்.
எனினும், 20 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே இதில் கலந்துகொண்டிருந்தனர்.
கலந்துகொண்டவர்களில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, குமார வெல்கம, மஹிந்தானந்த அழுத்கமகே, ரோஹித்த அபேகுணவர்த்தன, எஸ்.எம்.சந்திரசேன, ஆர்.துமிந்தசில்வா, மாலினி பொன்சேகா, பவிந்திரா வன்னியாராச்சி, கமலா ரணதுங்க, டி.பி.ஏக்கநாயக்க, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, ஹெகலிய ரம்புக்வெல்ல, சந்திம வீரக்கொடி, விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்த்தன, நிஷாந்த முத்துஹெட்டிகம, திஸ்ஸ கரலியத்த, மனுஷ நாணயக்கார, திஸ்ஸ வித்தாரண, சரண குணவர்த்தன ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாகும்.
இதனைவிட சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், முன்னாள் வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் உள்ளிட்ட மாகாணசபை மற்றும் உள்ளூராட்சிசபை உறுப்பினர்களும், முன்னாள் பிரதம நீதியரசர் சரத்.என்.சில்வா உள்ளிட்ட சிலரே இதில் கலந்துகொண்டி ருந்தனர்.
நாட்டை மீண்டும் பொறுப்பேற் குமாறு இவர்கள் மஹிந்த ராஜபக் ஷவுக்கு அழைப்பு விடுத்ததுடன், அந்த அழைப்பை தான் நிராகரிக்கப்போவ தில்லையென்றும் கூறியிருந்தார். இதனைவிட பிரதமர் வேட்பாளராகவோ, கட்சித் தலைவராகவோ தான் போட்டியிடப்போவதாகவோ மஹிந்த ராஜபக்ஷ தனது உரையில் குறிப்பிட வில்லை.

ad

ad