புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூலை, 2015

காணாமல் போனவர்கள் தொடர்பில் செப்ரெம்பரில் ஐ.நா சபையில் வெளியிடப்படும்; அரசு அறிவிப்பு

இலங்கை அரசாங்கத்தின்  கட்டுப்பாட்டில் 250ற்கும் குறைவான விடுதலைப்புலி உறுப்பினர்களே இன்னமும் உள்ளனர் என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித்.பி.பெரேரா தெரிவித்துள்ளதாக பீ.பீ.சி செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.
 
மேலும், இலங்கையில் இறுதிகட்டப் போரின்போது காணாமல் போனவர்கள் மற்றும் இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் தொடர்பிலான விவரங்களை இலங்கை அரசு எதிர்வரும்  செப்ரெம்பர் மாதம்  ஐ.நா சபையிடம் கையளிக்கப்படும்.
 
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதங்கள் நடைபெறவுள்ளன. அப்போது இலங்கை அரசாங்கம் சார்பில் விளக்கம் அளிக்கப்படவுள்ளன.
 
எனவே அவ்வாறான விளக்கங்களில், காணாமல் போனோர் தொடர்பான விபரங்களும் உள்ளடக்கப்படும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் , காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினையை அரசாங்கம் நன்றாக உணர்ந்துள்ளது. அப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அரசாங்கம் விரும்புகிறது. 
 
இருப்பினும், இப்பிரச்சினைக்கு முடிவு காண்பதில் பல சிக்கல்கள் உள்ளன. அந்த தகவல்களை உடனடியாக வெளியிட முடியாமல் உள்ளது.
 
காணாமல்போனவர்கள் மற்றும் இராணுவத்திடம் சரணடைந்தோரின் உறவினர்களது எதிர்பார்ப்பு மற்றும் ஏக்கங்கள் நியாயமானவையே என்பதை இலங்கை அரசு முற்றாக அறிந்துள்ளது. 
இறுதிப்போரில் சரணடைந்தவர்கள் குறித்து மாறுபட்டத் தகவல்களும் உள்ளன. எவ்வாறாயினும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதத்தின்போது அரசு சில தகவல்களை வெளியிடும். 
 
இது தொடர்பான விபரங்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடமும் உள்ளன. தற்போது இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் 250க்கும் குறைவான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களே உள்ளனர். அந்த பட்டியல், நீதி அமைச்சிடம் உள்ளது என பிரதி வெளிவிவவகார அமைச்சர் மேலும் கூறினார்
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=879954121102576438#sthash.Ng0TL21P.dpuf

ad

ad