13 ஜூலை, 2015

யாழ்ப்பாணத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்த கட்சிகள் சுயேச்சைக் குழுக்கள் 9


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை, யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றும் பல முக்கிய கட்சிகள் தாக்கல் செய்துள்ளன.இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக யாழ்.மாவட்டச்செயலகத்தில் இன்றைய தினம் 12 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், 9 சுயேட்சை குழுக்களும் இன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளன.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான இன்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளன.
இந்நிலையில் மொத்தமாக 17 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 12 சுயேட்சை குழுக்களும் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளன. இந்நிலையில் தற்போது கட்சிகளுக்கான கூட்டம் நடைபெற்று வருகின்றது.
குறிப்பாக தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் முன்னாள் நீதிபதி விக்னேஷ்வரராஜாவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதம வேட்பாளராக அங்கஜன் ராமநாதனும், மக்கள் விடுதலை முன்னணி கட்சி சார்பில் சந்திரசேகரனும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இன்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்
அத்துடன் இன்றைய தினம் 11 கட்சிகளும் ,9 சுயேட்சை வேட்பாளர்களும் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
மேலும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இன்றைய தினம் வேட்பு மனுத்தாக்கல் செய்த கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் விபரம்
கட்சிகள் -11
1) மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி)
2)எமது இலங்கை சுதந்திர முன்னணி
3)ஐக்கிய சோசலிசக் கட்சி
4)ஈழவர் ஜனநாயக முன்னணி
5)தமிழர் விடுதலைக் கூட்டணி
6)சோசலிச சமத்துவக் கட்சி
7)ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி 8)ஐக்கிய மக்கள் கட்சி
9)இலங்கை மக்கள் கட்சி
10)அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
11)நவசிங்கள உறுமய கட்சி
சுயேட்சை குழுக்கள் - 9
1) நடராஜபிள்ளை வித்தியாதரன்
2)புறனாந்து ஜோசப் அன்ரனி
3)தில்லைநாதன் சாந்தராஜ்
4)சுந்தரலிங்கம் சிவதர்சன்
5)முருகன் குமாரவேல்
6)ஆனந்த சங்கரி ஜெயசங்கரி
7)கறுப்பையா ஜெயக்குமார்
8)ஜெயபால ஜெயசுலக்சன்
9)சின்னதுரை சிவமோகன்
யாழில் 3 கட்சியும்,6 சுயேட்சை குழுவும் நிராகரிப்பு
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று மதியம் 12 மணியளவில் நிறைவுபெற்றதை தொடர்ந்து வேட்பு மனுத்தாக்கல் செய்த கட்சிகளில் 3 கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களில் 6 சுயேட்சை குழுக்களுக்கும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
(இரண்டாம் இணைப்பு)