13 ஜூலை, 2015

வித்தியா வழக்கின் இரத்த பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் ஒப்படைக்கபட்டது . விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

புங்குடுதீவில் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி வித்தியாவின் இரத்த மாதிரியும், சந்தேக நபர்களது இரத்த மாதிரியும் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டு பெறப்பட்ட அறிக்கை இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 13 ஆம் திகதி கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களது மாதிரிகளை இரசாயணப்பகுப்பாய்விற்கு உட்படுத்தி அந்த அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கடந்த வழக்கு விசாரணையின் போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அதன் பிரகாரம் இன்று இரத்த மாதிரிகளின் பகுப்பாய்வு அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த சந்தேக நபர்கள் எவரும் வழக்கிற்காக ஆஜர்படுத்தப்படாமையினால் குறித்த அறிக்கை தொடர்பிலான விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.