13 ஜூலை, 2015

தனக்கு தானே தீ மூட்டிய பெண் கான்ஸ்டபிள் சாவு; யாழில் சம்பவம்


திருமணம்  செய்ய மறுத்தமையினால் தனக்கு தானே பெற்றோல் ஊற்றி தீ மூட்டிக்கொண்ட பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.  
 
மேலும் தெரியவருவதாவது, 
 
யாழ்ப்பாணம்,  அச்சுவேலி வடக்கைச் சேர்ந்த பகீரதி (வயது 26) வட்டுக்கோட்டை பொலிஸ்  கான்ஸ்டபிளாகப் பணியாற்றி வருகின்றார். அச்சுவேலி இடைக்காட்டை சேர்ந்த ஒருவரை பதிவுத்திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
திருமணம் செய்வதற்கு மறுப்புத்தெரிவித்ததால் குறித்த நபரின் வீட்டிற்கு சென்ற குறித்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் மனவிரக்தியில் பெற்றோலை ஊற்றி தனக்கு தானே தீ மூட்டிள்ளார். 
 
அங்கிருந்தவர்களால் குறித்த பெண் காப்பாற்றப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும்  சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.