13 ஜூலை, 2015

கைதிகளை சவக்குழியில் தள்ளி கண்மூடி தனமாக துப்பாக்கியால் சுட்ட ஐஎஸ் தீவிரவாதிகள்: புதிய வீடியோவை வெளியிட்ட கொடூரம் (வீடியோ இணைப்பு)

ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களின் பினைக்கைதிகளை கொடூரமான முறையில் கொலை செய்யும் வீடியோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.

ஐஎஸ் தீவிரவாதிகள் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஈராக்கின் ஸ்பெஸ்செர் பகுதியில் நிகழ்த்திய படுகொலை தொடர்பான வீடியோவை வெளியிட்டு அவர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.
இதன் படி ஏராளமான கைதிகளை அவர்கள் சவக்குழியில் படுக்க கட்டாயப்படுத்தியதாகவும். பின்னர் அவர்களை துப்பாக்கியால் சுட்டுகொன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பலரை கொன்று டைக்ரிஸ் ஆற்றில் வீசி விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து திக்ரிட் பகுதியை ராணுவத்தினர் மீட்டு சோதனை செய்ததில் 600 உடல்கள் வரி கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த படுகொலைகளில் 1700 வரை இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த படுகொலைகள் இரவு வரை தொடர்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.