புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூலை, 2015

தமிழ்த் தேசவிரோத குழுக்களின் கூட்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு . டக்ளஸ்

தமிழ்த் தேசவிரோத குழுக்களின் கூட்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும், அதுவொரு தேர்தல் கூட்டேயொழிய வேறொன்றுமல்ல என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா
அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் விடுதியில் இன்றைய தினம் (02) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஊடகங்கள் எப்போதும் வெளிப்படையாகவும் உண்மைத்தன்மையுடனும் செய்திகளை வெளியிடும் அதேவேளை, நடுநிலைமையுடன் பக்கம் சாராதும் செயற்பட வேண்டும்.
நான் முன்னைய காலங்களில் எவ்விதமான அரசசார்பான நிகழ்வுகளை நடத்துகின்ற போது மூடிய அறைக்குள் நடத்தாமல் வெளிப்படைத்தன்மையுடனே நடத்தியுள்ளேன். அவ்வாறான செயற்பாட்டையே விரும்புகின்றேன்.
ஊடகங்கள் மாற்றுக்கருத்துக்களுக்கும் இடம்கொடுக்க வேண்டியது அவசியம் என்பதுடன் கடந்த காலங்களில் பக்கசார்பாக நடந்து கொண்டதன் பயனாகவே மக்கள் இடர்பாடுகளை சந்திக்க வேண்டிய துர்பாக்கிய நிலைய ஏற்பட்து. சுட்டிக்காட்டினார்.
நாம் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதற்கூடாகவும், நீடித்த ஆட்சியிலும் தான் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியுமென்ற நம்பிக்கை எமக்குள்ளது. இதற்கு மாறாக ஆட்சிமாற்றத்தின் ஊடாகவே பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறிவந்திருந்த போதிலும் இதுவரையில் அவர்களால் என்னத்தை சாதிக்க முடிந்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்?
அத்துடன், எமது இணக்க அரசியல் ஊடாக அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுடன் கலந்துரையாடியதன் பயனாக யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டுமன்றி வடமாகாணத்தில் பல இடங்களை விடுவித்துள்ளோம்.
குறிப்பாக, வலிகாமம் வடக்குப் பகுதியில் மக்களிடம் கையளிக்கப்பட்ட நிலங்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலப்பகுதியில் இணக்கம் காணப்பட்டிருந்தவை என்றும் இதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஏற்றுக் கொண்டுள்ளதையும் தெரிவித்திருந்தார்.
தூரநோக்கமும் நடைமுறைச்சாத்தியமானதுமான எதிர்கால இலக்கை நோக்கியதான எமது பயணத்தில் மக்கள் நலன்சார்ந்த பல்வேறு செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே ஆட்சி மாற்றத்தின் பின்னர் புதிய அரசு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளது என்று மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளதான பத்திரிகையில் வெளிவந்த செய்தியை இதன்போது ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியிருந்ததுடன்,
இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் செயலாளர் நாயகம் அவர்கள் பதிலளித்தார்.

ad

ad