புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2015

10 பிரதேச செயலர் பிரிவுகளில் காணிகள்-படையினர் மீண்டும் காணி உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு ஒப்புதல்

 யாழ்.மாவட்டத்தில் 10 பிரதேச செயலர் பிரிவுகளில் சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட காணிகள் தமக்கு தேவையில்லை என தெரிவித்து, படையினர், க
டற்படையினர் மற்றும் பொலிஸார் மீண்டும் காணி உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரியவருகின்றது.
சாவகச்சேரி, நல்லூர், கோப்பாய், தெல்லிப்பளை, மருதங்கேணி, பருத்தித்துறை, கரவெட்டி, உடுவில், யாழ்ப்பாணம், சங்கானை ஆகிய 10 பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள 29 கிராமசேவர் பிரிவுகளில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளில் படையினர், கடற்படையினர் மற்றும் பொலிஸார் நீண்டகாலம் தங்கியிருந்தனர்.
அத்துடன், குறித்த காணிகளை தமது தேவைகளுக்காக சுவீகரிப்பதற்கும் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இந்தநிலையில்  கடந்த 2014ம் ஆண்டு குறித்த சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து காணி உரிமையாளர்கள் தொடர்ச்சியான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் குறித்த காணிகள் தமக்கு தேவையில்லை என படையினர் மாவட்டச் செயலகம் மற்றும் காணி ஆணையாளர் ஆகியோருக்கு தெரியப்படுத்தியிருப்பதாக மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவித்திருக்கின்றன.
இதன்படி சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் ஜே.322- அல்லாரை, ஜே.341- இடைக்குறிச்சி, ஜே.342 கரம்பக்குறிச்சி, ஜே.325- கச்சாய், ஜே.316- சரசாலை தெற்கு, ஜே.326- கொடிகாமம் வடக்கு, ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் உள்ள சுமார் 15 ஏக்கர் வரையான காணிகளும்,
நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் உள்ள ஜே.94- அரியாலை, ஜே.123- கொக்குவில், ஜே.94- அரியாலை வடமத்தி, ஜே.90- அரியாலை, ஆகிய பகுதிகளில் உள்ள 12 ஏக்கர் வரையிலான காணிகளும்,
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் ஜே.267- ஊரெழு, ஜே.285- அச்செழு தெற்கு, ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 2 ஏக்கர் வரையிலான காணிகளும், 
தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவில் உள்ள ஜே.240 தெல்லிப்பளை, ஜே.226 இளவாலை வடக்கு, ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 28 ஏக்கர் வரையிலான காணிகளும்,
மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் உள்ள ஜே.242- நாகர்கோவில், ஜே.426- செம்பியன்பற்று பகுதிகளில் உள்ள சுமார் 3 ஏக்கர் வரையிலான காணிகளும்,
பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் ஜே.403- முனை, பகுதியில் 2 பரப்பு காணியும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் உள்ள ஜே. 382- கப்பூது பகுதியில் ஒரு ஏக்கர் அளவுள்ள காணியும்,
உடுவில் பிரதேச செயலர் பிரிவில் உள்ள ஜே.197- சுன்னாகம் பகுதியில் உள்ள 1.6 ஏக்கர் காணியும், யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் உள்ள பாசையூர் தெற்கு பகுதியில் உள்ள 5.23 ஏக்கர் நிலப்பகுதியும்,
சங்கானை பிரதேச செயலர் பிரிவில் உள்ள ஜே.172 கிராமசேவகர் பிரிவில் உள்ள சுழிபுரம் பகுதியில் 2 ஏக்கர் காணியும் சேர்த்து 23 இடங்களில் உள்ள காணிகளை சுவீகரிக்காமல் காலக் கிரமத்தில் காணி உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு படையினர் ஒப்புதல் தெரிவித் திருப்பதாக தெரியவருகின்றது.
இதேவேளை 6 இடங்களில் சில கிராமசேவகர் பிரிவுகளும் காணிகளும் உடனடியாக அடையாளம் காணப்படாத நிலை உள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவித்திருக்கின்றன.

ad

ad