புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2015

வகுப்பறையில் எந்த நேரமும் செல்போனில் பேச்சு: டீச்சரை கண்டித்து பெற்றோர்கள் போராட்டம்



ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், கூகலூர் பேரூராட்சி எல்லைக்கு  உட்பட்ட, தாழக்கொம்பு புதூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்குகிறது. இப்பள்ளியில், 1-முதல், 8-ம் வகுப்பு வரை 141-மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

இப்பள்ளியில் தலைமை ஆசிரியை கவிதா என்பவரின் தலைமையில், ஆறு ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். இவர்களில் நித்யா என்ற இடைநிலை ஆசிரியை, பள்ளிக்கு தாமதமாக வருவதாகவும், வகுப்பறையில் எந்த நேரமும், தான் வைத்துள்ள இரு மொபைல்ஃபோனில் யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். இதனால், அவர் சரியாக பாடம் நடத்துவதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இது தவிர, அதிகமாக இவர் அடிக்கடி விடுப்பில் செல்வதாக கூறி, பேற்றோர் தரப்பில் ஏ.இ.ஓ., முதல் கலெக்டர் வரை சமீபத்தில் புகார் செய்திருந்தனர். அப்புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகள் வழக்கம் போலவே தாமதப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், ஆசிரியை நித்யாவை இடமாற்றம் செய்ய கோரி, பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து, பள்ளி முன் நேற்று காலை, 8.45 மணிக்கு குவிந்தனர். பள்ளி முற்றுகையை அறிந்த கோபி ஏ.இ.ஓ., அர்ஜூன், மற்றும் காவல்துறை உதவி ஆய்வாளர் நாகலட்சுமி, ம்ச்ற்றும் பிரபுதாஸ், பழனிசாமி அடங்கிய குழுவினர் பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, ஆசிரியை பிரச்னை குறித்து தொடக்க கல்வி அலுவலரின் கவனத்துக்கு கொண்டுசென்று அவர் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏ.இ.ஓ., அர்ஜூன் தெரிவித்தார்.

அதற்கு மறுப்பு தெரிவித்து, உடனே சம்பந்தப்பட்ட ஆசிரியை இப்போதே இடமாற்றம் செய்ய வேண்டும். அப்போது தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என, பெற்றோர்கள் கூறினர்.

அவர்களிடம், ஏ.இ.ஓ., அர்ஜூன் பேசுகையில், "ஆசிரியை உடனடியாக இடமாற்றம் செய்யப்படுவார். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள். இதை காரணமாக கொண்டு, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருக்காதீர்கள்'' என்றனர். அதற்கு பின், பள்ளியின் கேட், 9.50 மணிக்கு திறக்கப்பட்டு, 10 மணிக்கு தேசிய கொடியேற்றி வைக்கப்பட்டு இறை வணக்கத்துடன் பள்ளி செயல்படத்துவங்கியது.

சிவசுப்பிரமணியன்

ad

ad