புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2015

த.தே.கூட்டமைப்பு ஜெனீவா செல்லாது: சுமந்திரன்- சர்வதேச நீதிமன்றமே தேவை: மாவை


ஜெனீவா மனித உரிமை பேரவையின் 30வது அமர்வுக்கு உத்தியோகபூர்வமாக எவரையும் அனுப்புவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
எனினும் தனிப்பட்ட ரீதியில் தமது உறுப்பினர்கள் எவரும் அந்த அமர்வில் பங்கேற்கலாம் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் உறுப்பினர் ஜெனீவா செல்வது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச நீதிமன்ற விசாரணை தேவை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த நீதிமன்றம் விசாரணைகள் அமையவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனவே மீண்டும் ஒரு சர்வதேச விசாரணை இந்த விடயத்தில் அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை இந்த மாதத்தில் வெளியாகவுள்ளது.
இதன்பின்னர் அந்த அறிக்கையை மையமாகக் கொண்டு வெளிநாட்டு நீதிபதிகளின் தலைமையிலான நீதித்துறை நடவடிக்கைகளே அவசியமாகியுள்ளன என்று மாவை குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இலங்கையில் இருந்து எவரையும் சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர் செய்யமுடியாது என்று ஏற்கனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்து வருகிறார்.
இலங்கை. சர்வதேச நீதிமன்றம் தொடர்பான ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடாமையை அவர் இதற்காக சுட்டிக்காட்டி வருகிறார்.
எனினும் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை வெளியானதன் பின்னர் பிரதமரின் கருத்துக்கு பதிலளிக்கப்படும் என்று சேனாதிராஜா இந்திய நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
ஆணையாளரின் அறிக்கை பெரும்பாலும் சர்வதேச நீதித்துறைக்கான பரிந்துரையை வழங்கும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள சேனாதிராஜா, இலங்கையில் தமிழர்களை பாதுகாக்கும் வகையில் நீதிச்சட்டங்கள் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ad

ad