புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2015

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: செல்வம் எம்.பி


மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்ட மீறல்களை புரிந்தவர்களுக்கு எதிராக சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
தற்போது உள்ளக விசாரணைனையா? அல்லது சர்வதேச விசாரணையா?  என்பதே வடக்கு, கிழக்கிலே பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற விடயம்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மீது பல விமர்சனங்கள் முன்வைத்து தவறான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தமட்டில் யாரும் உள்ளக விசாரணைகளை ஆதரிக்கவில்லை.
சர்வதேச விசாரணைகள் ஊடக எங்களுடைய மக்களின் அழிக்கப்பட்ட வாழ்க்கை, எமது மக்களின் மனித உரிமை மீறல்கள் மீது தொடரப்பட்ட அநீதிகள் ஆகியவற்றில் சம்மந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
விசாரணைக்கு உற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் எவ்வித தளர்வையும் ஏற்படுத்தாத வகையிலே அது வலுவான ஒரு விடயமாக இன்று பல சர்வதேச தலைவர்களிடம் நாங்கள் எடுத்துச் சொல்லியிருக்கின்றோம்.
சர்வதேச விசாரணைகளினூடாக நாம் இரு விடயங்களை கையாள முடியும்.
ஒன்று விசாரணை மற்றும் இனப்பிரச்சினை தீர்வு ஆகிய இரண்டையும் கையாளக்கூடிய வசதி வாய்ப்புக்களை சர்வதேச விசாரணைகளினூடாகவே ஏற்படுத்த முடியும் என்பதே எங்களுடைய நம்பிக்கையாக இருக்கின்றது.
அந்த வகையிலே நாங்கள் ஒரு போதும் உள்ளக விசாரணைகளை ஏற்றுக்கொள்ளப் போவது இல்லை.
உள்ளக விசாரணைகள் ஊடாக பல ஆணைக்குழுக்களை கூட்டி ஒரு பிரச்சினை உச்ச கட்டத்தில் இருக்கின்ற போது ஆணைக்குழுக்களை அமைப்பதன் ஊடாக அதனை தளர்த்துவதற்கான தன்மையைத்தான் கடந்த கால வரலாறுகள் கூறுகின்றது.
உள்ளக விசாரணை என்பது சர்வதேச விசாரணையை தளர்த்துவதற்கும்,அதனை வலு இழக்கச் செய்து அதனை கிடப்பிலே போடுவதற்கான வாய்ப்பாக அமைந்து விடக்கூடாது என்பதற்காக நாங்கள் இந்த உள்ளக விசாரணைகளை எதிர்க்கின்றோம்.
எனவே சர்வதேச விசாரணை என்பது நடத்தப்பட்டு ஐ.நா. சபையிலே எதிர்வரும் 30 ஆம் திகதி விசாரணைக்கு வந்து தீர்ப்பு என்பது பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்லுகின்ற வாய்ப்பை தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஏற்படுத்தும்.
அதனூடாக தண்டிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தான் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஒரு நிலைப்பாடாக இருக்கின்றது.
எதிர்வரும் 30 ஆம் திகதி ஜெனிவாவில் சர்வதேச விசாரணைகள் இடம் பெறவுள்ள காராணத்தினால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு செல்வதற்கு இருக்கின்றோம்.
அந்த வகையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடி எதிர்வரும் 30 ஆம் திகதி ஜெனிவா செல்லும் வாய்ப்பை உருவாக்குவோம்.என அவர் மேலும் தெரிவித்தார்

ad

ad