3 செப்., 2015

கோத்தபாய ,ரோஹித பொகல்லாகம ,துமிந்த சில்வா பாலித பெர்னாண்டோஉள்ளிட்ட 8 முக்கியஸ்தர்களிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை


முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட கடந்த அரசாங்கத்தின் எட்டு முக்கியஸ்தர்களிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை நடத்தவுள்ளது.
வாக்குமூலங்களை அளிக்க இன்று ஆணைக்குகுழுவின் எதிரில் முன்னிலையாகுமாறு கோத்தபாய ராஜபக்சவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு குறித்த எட்டு பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிதி துஸ்பிரயோகம், பாரியளலவிலான நிதி மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகின்றது.
ரக்னா லங்கா நிறுவனத்தின் முக்கிய பதவிகளை வகித்து வந்த மேஜர் ஜெனரல்களான பாலித பெர்னாண்டோ, எகொடவல, ஏ.சொய்சா, முன்னாள் அமைச்சர் ரோஹித பொகல்லாகம, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, மேல் மாகாண சபை உறுப்பினர் உபாலி கொடிகார, தெஹிவளை - கல்விஸ்ஸ நகரசபைத் தலைவர் தனசிறி அமரதுங்க உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
இந்த மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
இந்த விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளது குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிரான சாட்சி விசாரணைகளையே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ரக்னா லங்கா நிறுவனத்தின் 550 பேர் ஜனாதிபதி பிரச்சாரப் பணிக்காக ஈடுபடுத்தல், நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் பிரச்சாரக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அரச படையினரை கடமையில் ஈடுபடுத்தியமை, அவன்கார்ட் நிறுவனத்திற்கு இராணுவ ஆயுதங்களை வழங்குதன் ஊடாக அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய பணத்தை திரட்டாமை, சட்டவிரோதமான முறையில் ரக்னா லங்கா நிறுவனத்திற்கு ஆட்களை நியமித்தல், அரசாங்கப் பணம் துஸ்பிரயோகம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது.