3 செப்., 2015

கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ வுக்கு நன்றி சொன்ன ஜெயலலிதா!

சட்டமன்ற நிகழ்வுக்கு இடையில் தன்னிடம் நலம் விசாரித்த கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கு முதல்வர்
ஜெயலலிதா நன்றி தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் இன்று சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.
அப்போது சட்டமன்ற நிகழ்வுக்கிடையேயான ஓய்வின்போது, கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல்  தொகுதி எம்.எல்.ஏ பாலபாரதி, முதல்வர் ஜெயலலிதாவிடம் சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். 

“ எப்படி இருக்கீங்க மேடம், உடம்பு பரவாயில்லையா?"  என அவரின் நலம் விசாரிப்பிற்கு, மெல்லிய புன்னகையை தவழவிட்ட முதல்வர் ஜெயலலிதா, " நன்றாக இருக்கிறேன் மா " என முகமலர்ச்சியோடு உற்சாகமான குரலில் தெரிவித்தார். 

பிறகு தன்னை நலம் விசாரித்த எம்.எல்.ஏ பாலபாரதிக்கு நன்றியும் தெரிவித்தார் முதல்வர். 

இந்த நிகழ்வை தனது முகநூலில் பதிவிட்டுள்ள பாலபாரதி, "முதல்வரின் இயல்பான பேச்சு மகிழ்ச்சியளித்தது" என  தெரிவித்துள்ளார்.