3 செப்., 2015

மோடி நடவடிக்கை! இந்தியாவுடன் இணைய ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் விருப்பம், பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலநடுக்கம் வெள்ளம் ஏற்பட்டபோது, இந்தியா எடுத்த நடவடிக்கை அனைத்தும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களை ஈர்த்து உள்ளது. 

பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும்விதமாக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் மக்கள் இந்தியாவுடன் இணையவேண்டும் என்று வெளிப்படையாக பேச தொடங்கிஉள்ளனர் என்று செய்திகள் வெளியாகிஉள்ளது.

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீரை தங்களுடையது என்று பாகிஸ்தான் சொந்தம் கொண்டாடி வருகிறது. இப்பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது. பாகிஸ்தான் தொடர்ந்து எல்லையில் அத்துமீறிய தாக்குதல் நடத்துதல், தீவிரவாதிகளை ஊடுருவ செய்து இந்தியாவிற்குள் அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுதல் ஆகிய செயல்களை இடைவிடாது செய்துவருகிறது. பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதிகளையும் தூண்டிவருகிறது. ஐ.நா.விலும் முடிந்தவரையில் இதனை பிரச்சனையாக்க முயற்சிசெய்து வருகிறது. 

ஆனால் இதில் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் விதமாக, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் மக்கள் இந்தியாவுடன் இணையவேண்டும் என்று வெளிப்படையாக பேச தொடங்கிஉள்ளனர்.

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 2005-ம் ஆண்டு மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 80, ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். அப்போது இந்தியா உதவிசெய்தது. இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் கட்டமைப்பு பணிகளை செய்ய உலகநாடுகளை பாகிஸ்தான் அனுமதித்தது. ஆனால் சீனாவிற்கே பாகிஸ்தான் முக்கியத்துவம் கொடுத்தது. சீன தொழிலாளர்கள் அங்கு கட்டமைப்பு பணிகளை செய்து வருகின்றனர். துருக்கி, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளும் அங்கு முதலீடு செய்து வருகின்றனர். 

கடந்த 2014-ம் ஆண்டும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது பாகிஸ்தானுக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதியை நவாஸ் செரீப் பார்க்க சென்றபோது, மக்கள் திரும்பி போ என்று கோஷம் எழுப்பினர். அப்போதே பாகிஸ்தானுக்கான எச்சரிக்கை மணியானது ஒலிக்க தொடங்கிவிட்டது. பாகிஸ்தான் அரசு ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை புறக்கணித்தது மட்டுமின்றி(கட்டமைப்பு பணிகளில் வெளிநாடுகளே ஈடுபட்டு உள்ளது) தீவிரவாத வளர்ச்சிக்கு மையமாக்கிஉள்ளது. 

இது மக்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்திஉள்ளது, இந்திய அரசின் நடவடிக்கையில் ஈர்க்கப்பட்டு உள்ள மக்களுக்கு தங்களுக்கு அமைதியான வாழ்க்கையானது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்தியாவுடன் இணைய விரும்புகின்றனர் என்று தெரியவந்து உள்ளது. 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அஞ்சுமான் மின்ஹாஜ்-இ-ரசூல் சேர்மன் சயீத் அக்தார் ஹுசைன் தேக்லாவி பேசுகையில், இப்பகுதியில் வாழும் மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்புகின்றனர் என்று தெரிவித்து உள்ளார். தேக்லாவி மேலும் பேசுகையில் பாகிஸ்தானில் வளர்ந்துவரும் தீவிரவாதம் காரணமாக மக்களுக்கு மன உளைச்சல் அதிகரித்து உள்ளது. இங்குள்ள மக்கள் அமைதியான வாழ்க்கையையே விரும்புகின்றனர். 

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் இந்தியாவுடன் விரும்புவது தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர், இதற்கு வாய்ப்பு அளிக்கவேண்டும் என்று விரும்புகின்றனர். என்று கூறிஉள்ளார். 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மட்டுமின்றி பலுசிஸ்தான் மற்றும் கராச்சியில் வசிக்கும் மக்களும் இந்தியாவுடன் சுமூகமான உறவையே விரும்புகின்றனர் என்று தேக்லாவி கூறிஉள்ளார். பிரதமர் மோடியின் ஆட்சியால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டு உள்ளனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எழுந்துஉள்ள சுதந்திர கோரிக்கையானது பாகிஸ்தானுக்கு பயத்தை ஏற்படுத்து உள்ளது. பாகிஸ்தான் மீடியாக்களும் இந்த செய்தியை பெரிதுபடுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.