புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 செப்., 2015

ஜெனிவாவில்ஐ நா உப கூட்டங்களில் தமிழ் கூட்டமைப்பு பிரதிநிதிகள்! கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு வலியுறுத்து


ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த விவகாரம் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களுக்கு உட்பட்டு வருகின்ற நிலையில் தமிழ் தேசியக்
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் எம்.பி.க்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் ஜெனிவாவில் முகாமிட்டுள்ளனர்.
குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ,சாள்ஸ் நிர்மலநாதன், மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, யாழ். மாவட்ட எம்.பி. எஸ். சிறிதரன், மட்டக்களப்பு மாவட்ட கூட்டமைப்பு எம்.பி. வியாழேந்திரன், கே. கோடீஸ்வரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன்  ஆகியோர் ஜெனிவாவுக்கு வருகை தந்துள்ளனர்.
அத்துடன் வடமாகாண சபை உறுப்பினரான எம். சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், ஆர்னோல்ட், கே.சயந்தன்  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) உள்ளிட்ட பலரும் ஜெனிவாவில் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜெனிவாவில் முகாமிட்டுள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அங்கு நடைபெறும் உப குழுக்கூட்டங்கள் வெளிப்புற சந்திப்புக்கள் போன்றவற்றில் கலந்து கொண்டு தமிழ் மக்கள் சார்பில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அத்துடன் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து வருகின்ற தமிழ் தரப்பு எம்.பி.க்கள், இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டுமென்பதையும் வலியுறுத்தி வருகின்றனர்.
அதேவேளை ஜெனிவா சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்  ஐ.நா. அமர்வுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் எவரும் கலந்துகொள்ள மாட்டார்கள் என அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், மேற்குறிப்பிட்ட கணிசமான கூட்டமைப்பின் பா.உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் அங்கு முகாமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad