புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 செப்., 2015

போர்க்குற்றம் குறித்து கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு வலியுறுத்தும் இலங்கை தமிழ் அமைப்புகள்


இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது நடைபெற்ற விதிமுறை மீறல்கள்,  போர்க்குற்றம் குறித்து
விசாரணை நடத்திய ஐ.நா. விசாரணை குழு, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் தனது அறிக்கையை சமீபத்தில் தாக்கல் செய்தது.
அதில் போர்க்குற்றம் குறித்து வெளிநாட்டு, உள்நாட்டு நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்று சிபாரிசு செய்திருந்தது.
ஆனால், இலங்கை அரசோ, உள்நாட்டு விசாரணைதான் நடத்துவோம் என்று கூறிவிட்டது. சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகளும், வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்களும் விடுத்த கோரிக்கையை ஏற்கவில்லை.
இந்த நிலையில், போர் குற்றம் குறித்து கலப்பு நீதிமன்ற விசாரணைதான் நடைபெற வேண்டும் என்று இலங்கையில் உள்ள தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளது.
நான்கு தமிழ் கட்சிகள் மற்றும் பிற சிவில் சமூக குழுக்கள், ஐநா மனித உரிமை கவுன்சில் பரிந்துரை செய்தது போல கலப்பு நீதிமன்ற விசாரணையை அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், உள்நாட்டு விசாரணையால் தங்களின் கவலைகளுக்கு தீர்வு காண முடியாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ad

ad