புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 செப்., 2015

வித்யாவின் கண் பகுதியில் விந்தணு – பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவு

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் கூட்டு வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட மாணவி லோகநாதன் வித்யாவின் சடலத்தின்
கண் பகுதியில் இருந்து பெறப்பட்ட விந்தணுவை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
குறித்த படுகொலை வழக்கு ஊர்காவற்துறை நீதவான் எஸ்.லெனின் குமார் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, கொலை செய்யப்பட்ட மாணவியின் சடலத்தின் கண் பகுதியில் இருந்து பெறப்பட்ட விந்தணு மாதிரியை சட்ட வைத்திய அதிகாரி, இந்த வழக்கின் மேலும் ஒரு தடயப் பொருளாக, நீதிமன்றதில் சமர்ப்பித்தார்.
இதற்கமைய குறித்த விந்தணு மாதிரியை மரபணு பரிசோதனைக்காக, அனுப்பிவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், முன்னதாக சந்தேகநபர்களிடமிருந்து பெறப்பட்டுள்ள மரபணுக்களுடன் அதனை ஒப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திறக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மடிகணணி கையடக்க தொலைபேசி மற்றும் TAB ஆகியவற்றில், குற்றச்செயல் தொடர்பான காட்சிகள் அல்லது புகைப்படங்கள் இருந்தனவா என்பதை கண்டுபிடிக்குமாறு முன்னதாகவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனினும் மொரட்டுவை பல்கலைக்ழகத்தில் அதனை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளதாகவும் நீதிமன்றத்தில் இன்று சுட்டிக்காட்டப்பட்டது.
இதனையடுத்து குறித்த தடயப் பொருட்களை மேலதிக ஆய்விற்காக இலங்கை கணனி அவசர நடவடிக்கை பிரிவிற்கு அனுப்பிவைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வழக்கு விசாரணையை இம்மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் அதுவரை 9 சந்தேகநபர்களையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ad

ad