ஊவா மாகாண முதலமைச்சராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியைச் சேர்ந்த சாமர சம்பத் தஸநாயக்க, இன்று (செவ்வாய்க்கிழமை)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சாமர சம்பத், ஐ.ம.சு.மு சார்பில் மாவட்டத்தில் இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றிருந்தார்.
ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த ஹரீன் பெர்ணான்டோ, கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியதால் முதலமைச்சர் பதவி வெற்றிடமானது.
இந்நிலையில், தற்போது ஊவா மகாண சபையின் அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது.
இப்பதவியை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்க ஜனாதிபதி தீர்மானித்ததாவும் பல செய்திகள் வெளியாகின.
ஊவா மாகாணத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களை நியமிப்பதற்கு, கட்சியின் பொதுச் செயலாளர் முயற்சிப்பதாக கூறி அதற்கு நீதிமன்றம் இடைக்கால தடையும் விதித்திருந்தது.
கடந்த ஊவா மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்று ஆட்சியமைத்த போதும், கடந்த ஜனாதிபதி தேர்தலையடுத்து, ஐ.ம.சு.மு உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொண்டு ஹரீன் முதலமைச்சரானார் என்பது குறிப்பிடத்தக்கது.