கட்டடம் கட்டுவதா பெரிது. மனிதாபிமானத்தோடு மற்றவர்களுக்கு உதவுவதுதான் பெரியது என்று நடிகர்
விஷாலை சீண்டியுள்ளார் நடிகை ராதிகா சரத்குமார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலையொட்டி சரத்குமார் அணி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய ராதிகா, "எனது கணவர் சரத்குமார் முறைகேடு செய்துவிட்டதாக கூறிவரும் விஷாலும், நாசரும் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்கள் மன்னிப்பு கேட்காவிட்டால் சும்மா விட மாட்டேன்.
எத்தனையோ ஹீரோக்களுடன் நடித்திருக்கிறேன். அவர்களை பற்றி எனக்கு நன்றாக தெரியும். அதில், சரத்குமார் போன்று மனிதாபிமானமிக்க ஒருவரை, மற்றவர்களுக்கு ஓடிஓடி உதவி செய்கிற ஒருவரை நான் பார்த்ததில்லை. கட்டடம் கட்டுவதா பெரிது? மனிதாபிமானத்தோடு மற்றவர்களுக்கு உதவுவதுதான் பெரியது.
அண்ணன் ராதாரவி பேசிவிட்டதாக குற்றம்சாட்டுகிறார்கள். அவர் அப்படி பேசாவிட்டால்தான் பிரச்னை. எங்கள் குடும்பமே அப்படித்தான் பேசும். எங்க அப்பா எம்.ஆர்.ராதா பாட்டாகவே பாடுவார். எங்களை அவர் வளர்த்த விதம் அப்படி. அதையும் தாண்டி ராதாரவியின் பேச்சு யாரையாவது புண்படுத்தியிருந்தால் அவர் சார்பில் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.