புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 செப்., 2015

கோத்தபாய உட்பட குழுவுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பு


கடந்த ஜனாதிபதி தேர்தலின்  போது மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர்களை ஈடுபடுத்தியமை மற்றும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச்  செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட குழுவினருக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, மேஜர் ஜெனரல்களான பாலித்த பிரனாந்து, கே.பீ.கொடவெல, எம்.ஆர்.டப்ல்யூ.சொய்சா, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களான உபாலி கொடிகார, துமிந்த சில்வா, தனசிறி அமரதுங்க, ஜனக ரத்நாயக்க ஆகியோர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளர்.
ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர்கள் 550 பேரை தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தியமை, தேர்தலின் போது அந் நிறுவனத்தின் பணம் 86 லட்சம் பயன்படுத்தியமை தொடர்பில் இந் நபர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ரக்னா லங்கா நிறுவனத்தின் ஊழியர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர்கள் ஊடாக கோட்டை, கொலன்னாவை, தெஹிவளை, கடுவெல, மஹரகம ஆகிய பிரதேசங்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தியதோடு, ஊழியர்களின் பற்றாக்குறைகளுக்காக சிவில் பாதுகாப்பு படையினரை பயன்படுத்தியதோடு, அவர்களுக்கு ரக்னா லங்கா சீருடை வழங்கப்பட்டமையும், அரசாங்கத்திற்கு சொந்தமான ஆயுதங்களை உரிமை பத்திரமின்றி களஞ்சியப்படுத்தியமை உட்பட பல குற்றச்சாட்டுகள் கோத்தபாய மீது சுமத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள 800 முறைப்பாடுகளில் விசாரணைகள் நிறைவடைந்து விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட இரண்டாவது முறைப்பாடு இதுவென தெரியவந்துள்ளது.

ad

ad