புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 செப்., 2015

சர்வதேச விசாரணையைக் கோரி வடமாகாண சபையில் அதிரடித் தீர்மானம்




இன அழிப்பு தொடர்பிலான சர்வதேச விசாரணை பொறிமுறையொன்றினை கோரி வடமாகாணசபை தீர்மானமொன்றை அதிரடியாக நிiவேற்றியுள்ளது.
வடமாகாண சபை அமர்வுகள் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகின.
இந்தநிலையில் சபையின் வாயிற் பகுதியில் மாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தார்.
சர்வதேச நீதி விசாரணை தொடர வேண்டும், கொலையாளியை நீதிபதியாக நியமிக்க முடியுமா?,  உள்நாட்டு விசாரணை எமக்கு நீதி பெற்றுத் தராது போன்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். 
இந்நிலையில் முதலமைச்சர் சர்வதேச விசாரணை கோரி தீர்மானம் கொண்டுவர இருப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்து, கே.சிவாஜிலிங்கம் போராட்டத்தினை கைவிட்டு சபை அமர்வுகளில் பங்கேற்றிருந்தார்.
சபையில் முதலாவது பிரேரணையாக இன அழிப்பிற்கு சர்வதேச விசாரணை பொறிமுறை தொடர்பாக குறிப்பிட்டு தனது தீர்மானத்தை முதலமைச்சர் முன்மொழிந்தார்.
அதனை கே.சிவாஜிலிங்கம் ஆமோதித்திருந்தார்.
முதலமைச்சர் தனது பிரேரணையில்,  
ஏற்கனவே வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக பிரஸ்தாபித்ததுடன் சர்வதேச நீதிமன்றில் இலங்கையை முன்னிறுத்த முடியாதுள்ளமை பற்றியும் பிரஸ்தாபித்தார்.
குறிப்பாக ரோம் உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திடாதுள்ளமை பற்றி சுட்டிக்காட்டிய முதலமைச்சர் கடந்த கால அனுபவங்கள் பிரகாரம் உள்ளக விசாரணை தீர்வு எதனையும் தராது என்பதால் சர்வதேச விசாரணையே தேவையென முதலமைச்சர் முன்மொழிந்திருந்தார்.

ad

ad