புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 அக்., 2015

விசுவமடு கற்பழிப்பு வழக்கு! இராணுவத்தினர் 4 பேருக்கு சிறை: நீதிமன்றில் கதறியழுத உறவினர்கள்


விசுவமடுவில் 2009ம் ஆண்டு பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டமை மற்றும் வயோதிப பெண் ஒருவர் பாலியல்
துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை சம்பந்தமாக இராணுவத்தினரின் மேல் சுமத்தப்பட்ட வழக்கின் தீர்ப்பு, ஒரு எதிரி இல்லாத நிலையில் இன்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம் இளம்செழியனினால் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற இந்த வழக்கில் எதிரிகள் மூவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இருந்ததுடன், மற்றுமொரு இராணுவம் தலைமறைவாகியுள்ள நிலையில் இந்த வழக்கு இடம் பெற்றுவந்தது.

இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பெண் கற்பழிக்கப்பட்ட வழக்கில் எதிரிகள் நால்வருக்கும் தலா இருபது வருட சிறைத்தண்டனையும் ஐந்து லட்சம் ரூபா நட்டு ஈடு வழங்கும்படியும் பாலியல் துஸ்பிரயொகத்திற்கு உள்ளாக்கிய சம்பவத்தில் தலா ஐந்து வருட சிறைத்தண்டனையும் ஒரு லட்சம் ரூபா நட்டு ஈடும் வழங்கும்படியும் தீர்ப்பளிக்கப்பட்டது.

உரிய நட்ட ஈட்டை செலுத்த தவறும் சந்தர்ப்பத்தில் மேலும் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இராணுவ வீரர்களின் உறவினர்கள் இன்று நீதிமன்றத்திற்க்கு சமூகமளித்திருந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்படடதும் அவர்கள் நீதிமன்றத்தினுள்ளேயே கதறி அழுதார்கள்.

மற்றும் ஒருவர் மயங்கி வீழ்ந்த நிலையில் உறவினர்களும் பொலிசாரும் அவரை தூக்கி வந்து ஆசுவாசப்படுத்தினார்கள்.

நீதிமன்றத்தில் இன்று அதிக எண்ணிக்கையான இராணுவ அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.





ad

ad