புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 அக்., 2015

என் தந்தையின் புகழை சீரழிப்பது ஊடகங்கள் தான்: ஃபிபா தலைவரின் மகள் பரபரப்பு குற்றச்சாட்டு

]
இமாலய ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவரான செப் பிளேட்டரின் புகழை கெடுப்பது ஊடகங்கள் தான் என அவரது மகள் பரபரப்பு குற்றச்சாட்டு வெளியிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்து குடிமகனான செப் பிளேட்டர் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக கடந்த 17 வருடங்களாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், உலக கிண்ண கால்பந்து போட்டி தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றிற்கு உரிமம் வழங்கியதில் இமாலய அளவில் ஊழல் நடந்திருப்பதால், இதில் செப் பிளேட்டருக்கு முக்கிய பங்கு உள்ளது என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
செப் பிளேட்டர் மீதான அதிகாரப்பூர்வமான விசாரணையை சுவிஸ் அரசு கடந்த வாரம் தொடங்கியது.
இந்நிலையில், செப் பிளேட்டரின் மகளும், ஃபிபாவின் தலைமை ஆலோசகருமான கொரின் பிளேட்டர் நேற்று சுவிஸ் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது, தனது தந்தையின் நிர்வாகத்திறமை கண்டு பொறாமை கொண்டுள்ள ஊடகங்கள் தான் அவரது புகழை கெடுத்து வருகின்றன.
மேலும், தனது தந்தை மீது ஊடகங்களுக்கு இருக்கும் வெறுப்புணர்வு தான் அவரை பற்றி அவதூறான தகவல்களை பரப்பி வருவதற்காக காரணமாக உள்ளது.
ஊடகங்களுக்கு எந்த விதத்திலும் தீங்கு இழைக்காத தனது தந்தையை ஊடகங்கள் பழி வாங்கி வருவதற்கான காரணம் தனக்கு தெரியவில்லை.
ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் உண்மையல்ல. எனது தந்தையும் ஊழல் குற்றவாளி இல்லை என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
செப் பிளேட்டர் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என பல தரப்பினரிடையே கோரிக்கை எழுந்த நிலையில், ஃபிபாவின் விளம்பர நிறுவனங்களான கோக்க-கோலா, மெக்டோனல்ட், விசா உள்ளிட்ட நிறுவனங்கள் இரு தினங்களுக்கு முன்னர் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
அதில், ஃபிபாவின் எதிர்கால நலனிற்காக செப் பிளேட்டர் தனது தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என கேட்டுக்கொண்டன.
ஆனால், இதற்கு பதிலளித்த செப் பிளேட்டர், அடுத்தாண்டு பெப்ரவரி மாதம் வரை தலைவர் பொறுப்பில் நீடிப்பேன் என்றும் அதற்கு இடையில் ஒருபோதும் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
என் தந்தையின் புகழை சீரழிப்பது ஊடகங்கள் தான்: ஃபிபா தலைவரின் மகள் பரபரப்பு குற்றச்சாட்டு

ad

ad