புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 அக்., 2015

ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது ஏன்? தோனி புதிய விளக்கம்


தென் ஆப்பிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் ஆட்டத்தில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய அணி தோல்வியைத்
தழுவியது. இதையடுத்து, மூன்று ஆட்டங்கள் கொண்ட டி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.
இந்திய அணி தோல்வியை எதிர்நோக்கியிருந்த நிலையில், ஆட்டத்தின் 11-வது ஓவரின்போது மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்களில் சிலர் வீரர்களை நோக்கி குடிநீர் பாட்டில்களை வீசினர். இதனால், ஆட்டம் நிறுத்தப்பட்டது. வீரர்கள் அனைவரும் மைதானத்தில் அமர்ந்தனர். அந்த சமயத்தில் தென் ஆப்பிரிக்கா அணி, 3 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்திருந்தது. சிறிது நேரத்துக்குப் பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. அப்போதும் ரசிகர்கள் தொடர்ந்து ரகளையில் ஈடுபடவே 13 ஓவர்களுடன் போட்டி நிறுத்தப்பட்டது. ரகளையில் ஈடுபட்ட ரசிகர்கள் அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பிறகே தென் ஆப்பிரிக்க வீரர்கள் மீண்டும் களமிறங்கினர். இதனால் சிறிது நேரம் ஆட்டம் தடைபட்டது.
ரசிகர்களின் ரகளைக்கு கிரிக்கெட் உலகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இனி கட்டாக்கில் கிரிக்கெட் போட்டி நடத்துவது பற்றி பிசிசிஐ யோசிக்கவேண்டும் என்றும் கருத்துகள் எழுந்துள்ளன. இந்நிலையில் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது குறித்து தோனியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:
பாதுகாப்பு விஷயத்தில் எந்த ஒரு வீரருக்கும் பெரிய ஆபத்து எதுவும் நிகழவில்லை. மைதானத்தில் இருந்த பலம் வாய்ந்த ரசிகர்கள் சிலர் ஆடுகளத்தில் பாட்டில்களை வீசியுள்ளார்கள். அதனால் பெவிலியன் திரும்பினால் நல்லது என நடுவர்கள் எண்ணினார்கள். ஓர் அணி சரியாக ஆடாதபோது ரசிகர்கள் இதுபோல சிலசமயம் நடந்துகொள்வார்கள். முதல் பாட்டிலில்தான் கோபம் வெளிப்பட்டிருக்கும். மற்ற பாட்டில்கள் எல்லாம் ஜாலிக்காக வீசியதாகத்தான் இருக்கும். எனவே அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. விசாகப்பட்டினத்தில் ஒருமுறை நாங்கள் ஜெயித்தபோதும் ரசிகர்கள் பாட்டில்களை வீசினார்கள். முதல் பாட்டில் வீசுவதில் இருந்துதான் இது தொடங்கும். அதன்பிறகு வீசப்படுவது எல்லாமே ஜாலிக்காக செய்வதுதான் என்றார்.

ad

ad