புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 அக்., 2015

போரால் பாதிக்கப்பட்ட பெண் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருள் கண்காட்சி யாழில்

வாழ்வாதார தேடலுக்கான களம் எனும் தொனிப் பொருளில் போரினால் பாதிக்கப்பட்ட மற்றும்
பெண் தலைமைத்துவத்தினை அடிப்படையாகக் கொண்ட பெண் முயற்சியாளர்களின்  உற்பத்திப் பொருட்களின்  கண்காட்சி யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடத்தில் நடைபெற்றது.

குறித்த கண்காட்சியினை காகில்ஸ் நிறுவனத்தின் வடமாகாண சிரேஸ்ட செயற்பாட்டு முகாமையாளர் ஜே.எஸ். நேசகுமார் ஆரம்பித்து வைத்தhர்.
 முயற்சியாளர்களை ஊக்குவித்தலும் அவர்களுக்கான சந்தை வாய்ப்பினை உருவாக்கல், முயற்சியாளர்களுக்கான நிதிவழங்குநர்களை அறிமுகப்படுத்தல்,புதிய முயற்சியாளர்களை உருவாக்கல் போன்ற நோக்கங்களை கொண்டே குறித்த கண்காட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்தக்கண்காட்சி நாளைய தினமும் இடம்பெறவுள்ளதுடன் கண்காட்சியினை காலை 9மணிதொடக்கம் மாலை 4மணிவரை பார்வையிடமுடியும்.

ad

ad