புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 அக்., 2015

சுவிஸ் பாராளுமன்ற தேர்தல்: புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான கட்சிக்கு கூடுதல் வெற்றி வாய்ப்பு?

சுவிட்சர்லாந்து நாட்டில் எதிர்வரும் 18ம் திகதி நடைபெற உள்ள பாராளுமன்ற பொது தேர்தலில் புலம்பயர்ந்தவர்களுக்கு எதிரான கொள்கைகளை கொண்ட கட்சிக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகளவில் உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.












சுவிஸ் நாட்டில் உள்ள சுமார் 80 லட்சம் மக்கள் தொகையில், 30 சதவிகிதத்தினர் வெளிநாடுகளின் பூர்வீகம் கொண்டவர்கள்.
இருப்பினும், சுவிஸ் நாட்டிற்கு புகலிடம் கோர வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தவாறு உள்ளது குடிமக்களின் ஒரு பகுதியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும், அகதிகள் தொடர்பான விவகாரம் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்போது பாராளுமன்றத்தில் நடைபெற்று வரும் கூட்டணி கட்சிகளின் ஆட்சியில், மக்களின் செல்வாக்கை பெற்றுள்ள முதன்மை கட்சி SVP எனப்படும் சுவிஸ் மக்கள் கட்சி ஆகும்.
இந்த கட்சிக்கு தற்போது அரசாங்கத்தில் உள்துறை பாதுகாப்பு மற்றும் விளையாட்டு துறை என்ற ஒரு அமைச்சரவை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் செல்வாக்கில் சுவிஸ் மக்கள் கட்சிக்கு அடுத்த நிலையில், தற்போதைய அதிபரின் கட்சியான சமூக ஜனநாயக கட்சியும், 3வது இடத்தில் லிபரல்(FDP) கட்சியும் விளங்குகிறது.
கடந்த சில மாதங்களாக, சுவிஸில் அதிகரித்து வரும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கைக்கு எதிராகவே சுவிஸ் மக்கள் கட்சி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சுவிட்சர்லாந்து அரசு ஜனநாயக ரீதியில் ஆட்சி நடத்தினாலும், எந்த ஒரு முக்கிய பிரச்சனையாக இருந்தாலும், குடிமக்களின் நேரடி ஒப்புதலை பெற்ற பின்னரே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.
இவ்வாறான ஒரு நிலையில், புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக சுவிஸ் மக்கள் கட்சி நடத்திய ஆய்வில் சுமார் 48 சதவிகித மக்கள் SVP கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவற்றின் மூலம், சுவிஸ் மக்கள் கட்சிக்கு குடிமக்களின் பெருவாரியான வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
மேலும், சுவிஸ் மக்கள் கட்சிக்கு இரண்டு அமைச்சரவைகளை வழங்கப்படும் என்ற உத்திரவாதம் அளிக்காவிட்டால், கூட்டணியில் இருந்து பிரிந்து சென்று எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என சுவிஸ் மக்கள் கட்சி இரண்டு தினங்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஒரு வேளை, சுவிஸ் மக்கள் கட்சி தனியாக பிரிந்து எதிர்க்கட்சியாக மாறினால், புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டு கொண்டுள்ள வாக்காளர்கள் சுவிஸ் மக்கள் கட்சிக்கே அதிகம் வாக்களித்து வெற்றி பெற செய்ய வாய்ப்புள்ளது.
மேலும், gfs.bern என்ற அமைப்பு அண்மையில் வெளியிட்ட ஆய்வு ஒன்றில், சுவிஸ் மக்கள் கட்சிக்கு கடந்த 2011ம் ஆண்டில் கிடைத்த 26.6 சதவிகித வாக்குகளை விட, தற்போதைய தேர்தலில் 28 சதவிகித அளவிற்கு வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது என கூறியுள்ளதும் சுவிஸ் மக்கள் கட்சியின் வெற்ற வாய்ப்பை எடுத்துரைப்பதாக உள்ளது புலம்பெயர்ந்தவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ad

ad