புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 அக்., 2015

ஜனாதிபதியுடன் பேசி தீர்வைப் பெற்றுத் தாருங்கள்: அனுராதபுரம் சிறைச்சாலையில் கூட்டமைப்பினரிடம் கைதிகள் கோரிக்கை


கூட்டமைப்பினர் ஜனாதிபதியுடன் பேசி எமக்கு உடனடியாக தீர்வைப் பெற்றுத் தாருங்கள் என அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று அவர்களை பார்வையிடச் சென்ற கூட்டமைப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகள் நான்காவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களை இன்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சி.சிவமோகன், மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், வட மாகாண போக்குவரத்து அமைச்சின் இணைப்பாளர் செந்தில்நாதன் மயூரன், வவுனியா தெற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கா.பரமேஸ்வரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் மூவர் அனுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதியால் மட்டுமே எம்மை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முடியும். அவர் எமது விடுதலை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் இதற்கு கூட்டமைப்பினர் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
உடனடியாக கூட்டமைப்பினர் ஜனாதிபதியைச் சந்தித்து இது தொடர்பில் பேசி எமக்கு தீர்வு பெற்றுத் தரவேண்டும் என கைதிகள் தம்மிடம் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

ad

ad