புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 அக்., 2015

சுவிஸ் ஜெனீவா மாநில வாகன ஓட்டுனர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி: அதிரடி அறிவிப்பு வெளியிட்ட அரசு


சுவிட்சர்லாந்து நாட்டில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டுனர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையினை 6 மடங்கு அதிகரித்து அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சுவிஸின் ஜெனிவா மண்டல நிர்வாகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், ஜெனிவா மண்டலத்திற்கு உட்பட்ட வாகன ஓட்டுனர்கள் சாலை விதிகளை மீறினால் தற்போது வசூலிக்கப்படும் அபராத தொகையை விட 6 மடங்கு அதிகமாக வசூலிக்கப்படும். 
குறிப்பாக, சாலையில் அதிக ஒலியுடன் செல்லும் வாகனங்களுக்கு 500 பிராங்க் அபராதம் விதிக்கப்படும்.
மேலும், மக்கள் வசிக்கும் சாலைகளில் அதிக ஒலியுடன் பயணிக்கும் வாகன ஓட்டுனர்களுக்கு 300 முதல் 1,000 பிராங்க் வரை அபராதம் விதிக்கப்படும்.
வாகனங்களில் ஒலி எழுப்புவதை கட்டுப்படுத்தும் சாதனங்களை பொருத்தியுள்ள ஓட்டுனர்கள், முறையான விதிமுறைகளை பின்பற்றி இருக்காவிட்டால் அவர்களுக்கு 500 பிராங்க் அபராதம் விதிக்கப்படும்.
சாலையில் உள்ள போக்குவரத்து எல்லை கோடுகளை மீறுபவர்களுக்கு 500 பிராங்க் அபராதமும், பொது பேருந்துகள் நிறுத்துமிடத்தில் பொதுமக்கள் தங்களுடைய வாகனங்களை நிறுத்தினால் அவர்களுக்கு 250 பிராங்க் அபராதம் விதிக்கப்படும் என ஜெனிவா மண்டலத்தின் அட்டர்னி ஜெனரல் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலே கூறியுள்ள புதிய அபராத தொகையானது ஜெனிவா மண்டல வாகன ஓட்டுனர்களுக்கு மட்டும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad