புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2015

'திமுக-காங்கிரஸ் இடையே சுமூக உடன்பாடுக்கு வாய்ப்பு!'

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. -  காங்கிரஸ் கட்சிகளிடையே சுமூக உடன்பாடு ஏற்பட்ட வாய்ப்புள்ளது
என முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர்  தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர் கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினின் 'நமக்கு நாமே' நடைபயணம் வரவேற்கத்தக்கது. வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே சுமூக உடன்பாடு ஏற்பாட வாய்ப்பு உள்ளது.
பருப்பு விலை உயர்வுக்கு மோடி தலைமையிலான மத்திய அரசுதான் காரணம். இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த வெளிநாட்டில் இருந்து பருப்புகளை இறக்குமதி செய்து அனைத்து கடைகளுக்கும் விநியோகம் செய்ய வேண்டும். அதேபோல் சீன பட்டாசுகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், நாம் நாட்டில் உள்ள பட்டாசு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அனைத்து பொருட்களையும் இந்தியாவிலேயே தயார் செய்து விற்பனை செய்ய வேண்டும் என கூறிய மோடி அரசு, எதையும் செய்யாமல் இருப்பதுதான் இவை அனைத்திற்கும் காரணம்.

சமீப காலமாக மாட்டு இறைச்சி சாப்பிடுகிறவர்கள் மீதும், விற்பனை செய்பவர்கள் மீதும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவற்றை மத்திய அரசு கட்டுப்படுத்தாமல் உள்ளது'' என்றார்.

ad

ad