25 அக்., 2015


ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ விழுப்புரம் வந்தார். ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

மக்கள் நல கூட்டியக்கம் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. இந்த இயக்கம் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்தல் சமயத்தில் இந்த இயக்கம் மாபெரும் சக்தியாக உருவெடுக்கும். இந்த இயக்கத்துக்கு அரசியல் கட்சிகள் வரலாம், போகலாம்.

நான் இதுவரை 50 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்துள்ளேன். 5 ஆயிரம் கிலோ மீட்டர் நடைபயணம் சென்றுள்ளேன்.

நான் விடுதலைப் புலிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு அரசியல் நடத்துகிறேன் என்று சிலர் கூறி வருகிறார்கள். அவர்களே துன்பத்தில் உள்ளனர். அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு நான் அரசியல் நடத்தினால் அது போன்ற ஒரு ஈனத் தொழில் வேறு எதுவும் கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.