கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதம் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி 55 ஆம் கட்டையில் உள்ள பாதுகாப்பற்ற இரயில் கடவையைக் மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற 63 வயதான நிக்கிலஸ் ஸ்ரிபன் என்கிற நான்கு பிள்ளைகளின் தந்தையை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். இன்று இரவு 6.40 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவர் கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவராவார்.

PROMOTED CONTENT