புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 அக்., 2015

"வேட்டி" குறும் படம்

அடக்குமுறைகளே எழுச்சி தீ வளர்க்க எண்ணை ஊற்றுகிறது. நேற்று வரை இந்த குறும் படம் பற்றி எந்த தேடலும் இருக்கவில்லை.
நேற்று இந்த "வேட்டி" குறும் படம் இயக்கியதற்கா
க தமிழக காவல் துறை இயக்குனர் கௌதமனை விசாரணைக்கு அழைத்த செய்தி முக நூல் வழியாக வெளி வந்து பின்பு உணர்வாளர்கள் உலகப் பரப்பெங்கும் பொங்கி எழுந்து உணர்வெழுச்சியோடு கொந்தளித்துக் கொண்டு இருக்கையில் விசாரணை இல்லை என செய்தி வந்ததாக இயக்குனர் கௌதமன் அவர்கள் பதிவிட்டு இருந்தார்.
நேற்று எனக்கு உறக்கம் வரவில்லை.."வேட்டி படத்தில் தமிழக காவல் துறை அடக்குமுறையை கட்டவிழ்க்க திட்டமிடுமளவு அப்படி என்ன இருக்கிறது... அதிகாலை 2:00 மணிக்கு எழுந்து பார்த்தேன்..
விசாரணை செய்யுமளவு அப்படி என்ன தேச விரோதத்தை கண்டு விட்டார்கள் இந்த திரையில்?
வரிகள் எந்த அடிமை தேச மக்களுக்கும் பொருத்தமானவையே...அது தமிழகத்திற்கும் பொருந்தும் தமிழீழத்திற்கும் பொருந்தும்...அடிமைப்பட்ட பல தேசிய இனங்களுக்கும் பொருந்தும்...
வரிகள் யாவும் நெருப்பாக இருக்கின்றன. "எல்லோரும் கூட்டு களவாணிகள்.." என முகத்திரை கிழித்து சொன்னது சரி..
இந்த குறும் படத்தை மேலோட்டமாக பார்க்காமல் தமிழர்களின் இன்றைய அவலங்களை ஆழமாக எடுத்து சொல்லும் வரிகளாக ஊன்றி கவனிக்க வேண்டும்.
அனைத்து தமிழர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய குறும்படம். அத்தனை வரிகளையும் நெஞ்சில் ஏற்று மீட்டு சிந்திக்க வேண்டிய குறும்படம்.
குறுகிய குறும் படம் தான். அதில் முன்பகுதியில் வரும் இந்த அழகான வீரம் செறிந்த காதல் வரிகள் நெஞ்சில் தீ மூட்டுகிறது;.
"நாம அடிமைங்க..வாழவே வழி இல்லை .. அப்புறம் எங்கேருந்து நாம நிம்மதியாக வாழுறது? நாடே கொல்லப் போகுது..இதில நாம மட்டும் கதவை சாத்திக்க முடியுமா?
காதல்ங்கிறது சுயநலமில்லை. அது ஒரு விடுதலை உணர்வு. நாம யாருக்கும் அடிமை இல்லைங்கிற கம்பீரம் தான் காதல். நாம
வாழுற வாழ்க்கை நம்முடையதா இல்லாதப்ப காதல் என்கிறதுக்கு வேறு என்ன தான் அர்த்தம் இருக்கு?
நான் உன்னை உயிருக்கு உயிரா காதலிக்கிறன். ஆனா அதை விட ஆயிரம் மடங்கு அதிகமா நாம வாழுற இந்த மண்ணை காதலிக்கிறன்.
அடிமை தேசத்தில பூக்கிற பூவை நீ பறிச்சு வைச்சிருக்கிறதை கூட எனக்கு பார்க்க பிடிக்கிறதில்லை.
நீ பெத்துக்கப் போற பிள்ளை இந்த பூமியில சுதந்திரமா வாழணும். அது தான் நான் உன் மேல வைச்சிருக்கிற காதல்.
இந்த மண் மீட்பு போராட்டதில எனக்கு எது வேண்டுமானாலும் நடக்கும்......"
அழகான நேர்த்தியான காட்சித் தொகுப்பு. ஓவியரும், தமிழின உணர்வாளரும், சிறந்த நடிகருமான ஓவியர் சந்தானம் இந்த படத்தில் வேட்டிக்கு உயிர் கொடுத்துள்ளார்.
வெள்ளையனை துரத்த தானா இந்த வரிகள்? இன்றும் எம்மை அடிமை கொள்ளும் அந்நியருக்குமல்லவா பொருந்துகின்றன....??
வெள்ளைக்காரரிடம் இருந்து இரத்தம் சிந்தி விடுதலை பெற்றுக் கொடுத்ததாக கூறும் இந்தியா இன்று அடிமைகளின் கூடாரமாக...
தமிழர்கள் இன்னமும் அடிமைகளாக.. தமிழர் தேசங்களும் இன்னமும் அடிமை தேசங்களாக..இந்த அடிமை தேசத்தின் விடுதலைக்காக இன்று போராடுபவர்களை இந்திய தேச துரோகிகளாக பார்க்கிறார்கள்...
கொள்ளை அடிக்கிறார்கள் ஆதிக்க சக்திகள்.. செத்து மடிகிறார்கள் எங்கள் தமிழர்கள்...
கிழிந்த வேட்டியில் தமிழரின் மானம் காக்க படுகிறதா?
படத்தின் இறுதியில் வரும் வரிகள் இந்திய சுதந்திரத்தை கேள்வி கேட்டு அடிமை மக்களின் அவலங்களை எடுத்து சொல்கிறது...
ஏனென்று கேட்க நாதி இல்லா இனமாக தமிழர்கள்
" இந்தி மொழிக்கு இருக்கிற உரிமை தமிழுக்கு இருக்கா? இந்தி மொழி பேசுபவனுக்கு இருக்கிற செல்வாக்கு தமிழனுக்கு இருக்கா?
அன்று லண்டனுக்கு அடிமையாக இருந்தோம். இன்று டெல்லிக்கு அடிமையாக இருக்கிறோம். வேற என்னய்யா நடந்தது?
எங்கள் மக்கள் சாகிறதை வேடிக்கை பார்த்தீங்க.. அழிச்சு முடிச்சீங்க..மிச்சம் இருக்கிற உசிரையாவது காப்பாற்ற நல்ல தீர்ப்பை கொடுங்க என நாம கெஞ்சினமெ...கதறிறமே...வயித்தில அடிச்சிகிட்டு துடிக்கிறமே...உங்களுக்கு எதுவுமே கேட்கலையாடா??
ஒன்றா இரண்டா உலகம் முழுக்க 25 பேருக்கும் மேல உடம்பையே தீயாக்கி கதறிக் கதறி கோரிக்கை வச்சமே.. அப்படி என்னடா உங்களுக்கு அரக்க மனசு? பேயும் பிசாசும் கூட இரங்குமே?
மீன் பிடிக்கப் போன எம் உறவுகளை 700க்கும் மேல எங்க எதிரி சுட்டானே? செத்தவங்க உங்கள் சொந்தம் இல்லையா? நம்ம அரசாங்கம் என்றால் நம்மளை காப்பாற்றணுமா இல்லையா?
அந்த சிங்களவன் கொலைகாரன்னு வெள்ளைக்காரன் சொல்லுறான். அதே சிங்களத்தானை நண்பன்னு இந்த டெல்லிக் காரன் சொல்லுரான்யா. நியாயமா?
செத்ததும் நீங்க. கொன்னதும் நீங்க..அதுக்கு காரணமும் நீங்கள் தான்னு சிங்களவன் சொல்லுறானே? அவன் குரல் வளையை என்னால கடிச்சு துப்ப முடியலையே? ஏன்? நாங்க அடிமை என்கிறதால தானே?
கொலைகாரப் பாவிகளும் அவங்களுக்கு அவங்களுக்கு உதவி செஞ்ச படுபாவிகளும் கூட்டு சேர்ந்த துரோகிகளும் நல்லவன் மாதிரி இப்போ வேஷம் கட்டி ஆடுறாங்களே.. அவங்களை நடுத்தெருவில நிக்க வைச்சு செருப்பால அடிக்க முடியலையே..ஏன்? நான் அடிமை என்கிறதால தானே??......."
இது போல் தொடரும் முத்து முத்தான உண்மை கொத்துக் குண்டுகள்.. எதிரி கலங்கிப் போனதுக்கு காரணம் தெரிகிறது.
இந்த குறும்படம் சாதாரண படம் அல்ல. வரலாற்றின் வடம் இழுக்கும் வரிகளை அள்ளி தந்துள்ளது. பாராட்டுக்கள் இயக்குனர் கௌதமன், மற்றும் இதர உணர்வு மிக்க தோழமைக் கலை குழாமுக்கு.
அனைத்து தமிழர்களும் இந்த திரைப்படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும் என தாழ்மையாக வேண்டுகின்றேன்.
எம் தேசம் விடியும்... அப்பொழுது கொண்டாடுவோம் எம் விடுதலையின் உச்சமான பெரும் மகிழ்ச்சியை.
உறவுகளே இந்த படத்தை நாம் ஏன் பார்க்க வேண்டும் என எமக்கு இந்திய அரசின் காவல் துறை கொடுக்க நினைத்த அழுத்தம் எடுத்து சொல்கிறது. காலம் இனி மிகுதியை சொல்லும்.
பாராட்டுக்கள் மீண்டும் அனைவருக்கும்...
Please watch: "7G Cheating Challenge | Senjurvean" ➨ https://www.youtube.com/watch?v=ZgBk2vxsggU -~-~~-~~~-~~-~- வேட்டி | குறும் படம் |வ கௌதமன் Veatti, direc...
YOUTUBE.COM

ad

ad