புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2015

நார்வே தலைநகர் ஓஸ்லோவில் கார்களுக்கு தடை

நார்வே தலைநகர் ஓஸ்லோவில்,  அனைத்து கார்களுக்கும் வரும் 2019-ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்படுகிறது. இதனால் உலகில்
கார்கள் ஓட்ட தடை விதிக்கப்பட்ட முதல் பெரிய நகரம் என்ற பெருமையை ஓஸ்லோ பெறவுள்ளது.
நார்வேயின் மிகப் பெரிய நகரமான இங்கு 7 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். நகரில் 3 லட்சத்து 50 ஆயிரம் கார்கள் ஓடுகின்றன. போக்குவரத்து நெரிசலையும், காற்று மாசடைவதை தடுக்கும் வகையிலும் இங்கு அனைத்து கார்களுக்கும் தடை விதிக்க முடிவு செயயப்பட்டுள்ளது.
வரும் 2019-ம் ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வரும்.பேருந்து போக்குவரத்து, ரயில் சேவை வசதியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு சைக்கிளில் செல்பவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல்வேறு மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்கு முன், ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் 2020-ம் ஆண்டு முதல் கார்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஓஸ்லோவை விட மிகப்பெரிய நகரமான மாட்ரிட்டில் இது எந்தளவுக்கு சாத்தியப்படும் என்று தெரியவில்லை.
கடந்த மாதத்தில் பாரீஸ் நகரில்'  ஈபிள் டவர் ' போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு கார்களில் செல்லத் தடை விதிக்கப்பட்டது.
அதே போல் மிலனில், கார்களை வீட்டில் விட்டு விட்டு பொதுமக்கள் பயன்படுத்தும் பேருந்துகளில் செல்பவர்களுக்கு  அரசே இலவச டிக்கெட்டுகள் மற்றும் கூப்பன்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

ad

ad