புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2015

முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு சுவிட்சலாந்து பிறவென்பெல்ட் (Thurgau Frauenfeld) வாழ் தமிழ் மக்கள் உதவி



போராட்டத்தின் போது மாற்றுத்திறனாளியான உங்களுக்கு தலை வணக்குகின்றோம். எமது போராட்டத்திற்காக உங்களது உறுப்புக்களை இழந்து  தியாகங்களை செய்திருக்கிறீர்கள்.  உண்மையில் அதற்கு நான் தலை வணங்குகின்றேன் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிமலநாதன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைகோட்டின் கீழ் வாழ்ந்து வரும் மாற்றுத் திறனாளிகளின் பிள்ளைகளுக்கு பாடசாலை பை மற்றும் பயிற்சி புத்தகங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று முல்லைத்தீவு திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிமலநாதன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தனதுரையில் தெரிவிக்கையில்
எமது நாளைய சமூதாயம் எமது பிள்ளைகளின் கல்வியில் தான் தங்கியிருக்கிறது. உங்களது குடும்பத்தில் பலதேவைகள் இருக்கின்றன. ஆனால் எமது பிள்ளைகள் கல்வியில் உயர்நிலைக்கு வர மென்மேலும் ஊக்கபடுத்தி அவர்களை நாளைய சமூதாயத்தில் மதிக்கதக்க உயர் பண்புகள் உள்ள மனிதர்களாக நீங்கள் மாற்றவேண்டும்.
அப்போது உங்கள் பிள்ளைகள் எங்கள் அப்பா மண்ணுக்காக போராடியவர்கள் என்று உறுதியாக பெருமையாக சொல்கின்ற காலம் ஒன்று வரும் அதற்காக தொடர்ந்து காத்திருப்போம் என தெரிவித்தார்.
புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும், ஒவ்வொரு புலம் பெயர் உறவுகளும் எமது நினைவுகளுடன் வாழ்கின்றமையை நான் சென்ற போது உணர முடிந்தது.
எமது தாய் நிலம் அபிவிருத்தி  அடைய வேண்டும் என்றால் இதில் புலம்பெயர் எம்மக்களின் தியாகம் பிரதானமானதாகும். அந்த வகையில், இவ் உதவியைச் செய்த மாநில மக்களுக்கு உங்கள் சார்பாக எனது இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
சுவிஸ்லாந்து நாட்டின் துர்க்கா மாநிலத்தின் பிறவென்பெல்ட்(frovenfield) வாழ் அனைத்து வெளிநாட்டவர்களின் கலை கலாச்சார நிகழ்வின் பொழுது ஈழத்தமிழ் மக்களால் எமது நாட்டு உணவு தயாரித்து விற்பனை செய்து அதனால் பெறப்பட்ட 170 040 இலங்கை ரூபாய்க்கள் பெறுமதியான உதவிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்துவரும் மாற்றுத்திறனாளிகளின் பிள்ளைகளுக்கு பாடசாலை மற்றும் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்தளன், முள்ளியவளை, வட்டுவால், செல்வபுரம், சிலாவத்தை, அளம்பில், செம்மணல் ஆகிய கிராமங்களை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 120 மாணவ மாணவிகளுக்கு குறித்த பாடசாலை பை மற்றும் பயிற்சிப் புத்தகங்களை நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிமலநாதன் மற்றும் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த உதவி திட்டமானது முதற்கட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வறுமைகோட்டின் கீழ் வாழும் மாற்றுதிறனாளிகளின் குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் முகமாக முன்னெடுக்கபட்டுள்ளது.
இதேவேளை ஏனைய மாவட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவ, மாணவிகளின் கல்வியை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வட மாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயந்தன், மாற்று திறனாளிகளின் சங்கத்தலைவர் லோகராசா, முல்லைத்தீவு பங்குத்தந்தை அருட்பணி அன்ரனி பிள்ளை, அருட் சகோதரிகளான அஞ்சலீன், யக்குளின் மற்றும் மாற்று திறனாளிகளின் பிள்ளைகள் கலந்து கொண்டனர்.

ad

ad