புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

28 அக்., 2015

பிரதமர் மோடி உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்: பர்வேஸ் முஷரப் விமர்சனத்தால் பரபரப்புபிரதமர் நரேந்திர மோடி உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 1999 முதல் 2008ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அதிபராக பர்வேஸ் முஷரப் இருந்தார். இந்தநிலையில் பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், 10 வயது முதல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உறுப்பினராக இருக்கும் மோடி, தீவிர இந்துத்துவா கொள்கையை நடைமுறைபடுத்துவதை மட்டுமே தமது திட்டமாக வைத்துள்ளார். மோடியின் ஆட்சியில் இந்து தீவிரவாதமும், அடிப்படைவாதமும் ஊக்குவிக்கப்பட்டு, இஸ்லாமியர்களுக்கு எதிரான அடக்குமுறை அதிகரித்துள்ளது. 

ஒசாமா பில்லேடன் போன்றோர் பாகிஸ்தானின் கதாநாயர்களாக பார்க்கப்படுகிறார்கள். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் லஷ்கர் இ தொய்பா, முஜாகிதீன்கள், தாலிபான் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சியும், இதர வசதிகளும் செய்து தரப்பட்டது. 

காஷ்மீர் மக்கள் இந்திய ராணுவத்தால் தொடர்ந்து வேட்டையாடப்படுகின்றனர். அந்த மக்களுக்கு விடுதலை வாங்கித் தருவதற்காகவே எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கிறது என்று கூறியுள்ளார்.