புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 அக்., 2015

அரசாங்கத்தின் தீர்மானத்தில் ஏமாற்றம்! மீண்டும் போராட்டத்தில் குதிக்கவுள்ள அரசியல் கைதிகள்


தமது விடுதலை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தீர்மானத்தை தாம் ஏற்கப்போவதில்லை என்று தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்துள்ளனர்.
தாம் உண்ணாவிரதத்தை மேற்கொண்டபோது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் வழங்கப் போவதில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மீண்டும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளப் போவதாக தமிழ் அரசியல் கைதிகள் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை இலங்கையில் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படமாட்டாது என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துவிட்டது.
தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி சுமார் 200 தமிழ் அரசியல் கைதிகள் நாடு முழுவதிலும் உள்ள சிறைகளில் 6 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.
இந்தநிலையில் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பின்போது சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
எனினும் பொதுமன்னிப்புக்கான வாய்ப்புக்கள் இல்லை என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
எனினும் பிணை அனுமதி வழங்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

ad

ad