புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2015

மழையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 12 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் உதவி: ஜெயலலிதா


ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக 11.11.2015 அன்று கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், கடவச்சேரி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ராமு,

13.11.2015 அன்று விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், களமருதூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சைக்காரன் மகன் சுப்பிரமணியன், 13.11.2015 அன்று காஞ்சீபுரம் கோனேரி குப்பத்தைச் சேர்ந்த குமரவேல் மகன் சதீஷ்குமார்;

14.11.2015 அன்று கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் வட்டம், குமராட்சி கிராமத்தைச் சேர்ந்த ராமாமிர்தம் மகன் பிச்சைமுத்து, கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், கன்னடை கிராமத்தைச் சேர்ந்த குள்ளன் மகன் காளையன்.

15.11.2015 அன்று விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர் பேட்டை வட்டம், வேலூர் கிராமத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் சுப்பிரமணியன், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், மதனகோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னக்கண்னு மகன் சாமிக்கண்னு; ஆகியோர் வெள்ளப்பெருக்கின் காரணமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

13.11.2015 அன்று கடலூர் மாவட்டம், சி. எண் பாளையம் கிராமத்தை சேர்ந்த குண்டுமணி மகன் காளையன்; 15.11.2015 அன்று கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், கிள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்த லாரன்ஸ் என்பவரின் மனைவி தெரசம்மாள், கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மளிகைமேடு கிராமத்தைச் சேர்ந்த கருணாம்பு மகன் ராமசாமி, கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், குறிஞ்சிப்பாடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த திருவெங்கடேசன் மகன் மணிமாறன் ஆகியோர் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தனர்.

13.11.2015 அன்று சென்னை மாவட்டம், பெரம்பூர் வட்டம், வியாசர்பாடியைச் சேர்ந்த கண்ணன் மகன் அருண் மழையின் காரணமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த இந்த 12 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு ஜெயலலிதா கூறி உள்ளார்.
 

ad

ad