புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2015

பாரிஸ் தாக்குதல்! தப்பிச்சென்ற தாக்குதல்தாரியைத் தேடும் பிரான்ஸ் அதிகாரிகள்


பாரிஸ் தாக்குதலை அடுத்து தப்பிச்சென்றிருக்கலாம் என்று நம்பப்படும் ஒருவரை தேடிவருவதாக பிரான்ஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
26வயதுடைய பெல்ஜியத்தை சேர்ந்த ஆப்டெசஸாம் சாலி என்று இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பாரிஸ்
தாக்குதலின்போது 7பேர் பங்கு பற்றியுள்ளார்கள். இவர்களில் இரண்டுபேர் பெல்ஜியத்தை சேர்ந்தவர்களாவர் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பிரான்ஸின் உள்துறை அமைச்சு தகவல்களின்படி இந்த தாக்குதலுக்கான திட்டம் வெளிநாடு ஒன்றில் தீட்டப்பட்டு;ள்ளது.
இந்த தாக்குதலுக்கு பிரான்ஸில் இருந்து உதவிகள் கிடைத்துள்ளன என்று உள்துறை அமைச்சர் பேனாட் காசெனிவி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் பெல்ஜியத்தில் பிறந்த ஆப்டேசலாம் குறித்து தகவல்கள் தெரிந்தால் அறிவிக்குமாறு பிரான்ஸ் பொலிஸார் கோரியுள்ளனர்.
129பேர் பலிகொண்ட தாக்குதலை அடுத்து பிரான்ஸில் மூன்று நாள் சோக தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ad

ad