புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

14 நவ., 2015

முல்லைத்தீவு காடழிப்பு சூத்திரதாரிகளை தராதரம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும் : ஜனாதிபதியிடம் வடக்கு முதல்வர் கோரிக்கை

முல்லைத்தீவு 600 ஏக்கருக்கு மேற்பட்ட காடுகள் வெட்டப்பட்டுள்ளன. அங்கிருந்து பெறுமதியான மரங்கள் கடத்தப்பட்டுள்ளன என ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன்.

இரவோடு இரவாக காடுகளை வெட்டியவர்கள் யார்? வெட்டிய காட்டிலிருந்த பெறுமதியான மரங்களை கடத்தியவர்கள் யார்? என்பதை கண்டறியுங்கள். அது யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்துங்கள் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தினார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் நேற்று முன்தினம் ஜனாதிபதியைச் சந்தித்து பேசினார்.இந்நிலையில் நேற்று முதலமைச்சரைச் சந்தித்த ஊடகவியலாளர்கள்,முல்லைத்தீவு விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசினீர்களா? என்ன பேசப்பட்டது?அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பினர்.அதற்கு   பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு முதலமைச்சர் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,
எங்களுடைய மக்கள் ஒரு மரக்கிளையை வெட்ட முடியாது. உடனே கைது செய்யப்படுவார்கள், சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். ஆனால் 600ஏக்கர்  காடுகள் அழிக்கப்பட்டு மரங்கள் கடத்தப்பட்டுள்ள விடயத்தை ஜனாதிபதியிடம் நாங்கள் ஆதாரங்களோடு சுட்டிக்காட்டினோம். இந்த விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் கோரினோம் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.