புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

14 நவ., 2015

பிபா தலைவர் தேர்தல் பிளாட்டினிக்கு மறுப்பு

4
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (பிபா) தலைவருக்கான தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதப்பகதியில் நடைபெறவுள்ள நிலையில், குறித்த
தலைமைப் பதவிக்கான வேட்பாளர்களில் ஒரவரான பிளாட்டினியின் விண்ணப்பம் பிபாவால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பிபா கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊழலில் சிக்கி தவித்தது. இந்த ஊழல் தொடர்பாக அமைப்பின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அதன் தலைவரான செப் பிளாட்டரும் சங்கடத்திற்கு உள்ளானார். ஆனால் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மீறி சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற தேர்தலில் 5ஆவது முறையாக வெற்றி பெற்றார்.
ஆனால், பிபா தலைவர் பதவியில் இருந்து பிளாட்டர் விலக வேண்டும் என்று தொடர்ந்து கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதற்கு சம்மதம் தெரிவித்த பிளாட்டர், அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி தலைவருக்கான தேர்தல் நடைபெறும். அதுவரை நான் தலைவராக இருந்து பிபாவின் சீர்கேட்டை களைவேன் என்றார்.
இதனால் செப் பிளாட்டரின் தலைவர் பதவிக்கு பலர் போட்டியிட விரும்பினார்கள். அதில் ஐரோப்பிய கால்பந்து சம்மேளன தலைவரான மிச்செல் பிளாட்டினியும் ஒருவர். ஆனால் பிளாட்டினியின் விண்ணப்பத்தை ஏற்க மறுத்துள்ளது சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம்.