புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 நவ., 2015

பிரான்ஸ் கால்பந்து மைதானத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட தீவிரவாதிகள்


 பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது. நேற்று 7 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில், 153 பேருக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதற்கிடையே மற்றோரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பாரிஸின் அடையாளங்களுள் ஒன்றாக கருதப்படும் செயின் டி பிரான்ஸ் மைதானத்தில் நேற்று உலகச் சாம்பியன் ஜெர்மனி அணியுடன் பிரான்ஸ் அணி நட்பு முறையிலான போட்டியில் கால்பந்து போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தது. போட்டியை காண 80 ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருந்தனர். மைதானத்திற்கு வெளியேவும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு போட்டியை ரசித்துக் கொண்டிருந்துள்ளனர். இந்த போட்டியை பிரான்ஸ் அதிபர் ஹோலேண்டேவும் ரசித்துக் கொண்டிருந்தார்.     

முதல் பாதி ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, மைதானத்திற்கு வெளியே உள்ள உணவகம் ஒன்றில் மனித வெடி குண்டு தாக்குதல் நடந்துள்ளது. இதில்  3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். பின்னர் அதுவே 5 ஆக உயர்ந்தது. இதையடுத்து ஸ்டேடியத்தை போலீசார் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். அதிபருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக கால்பந்து மைதானத்தில்தான் வெடிகுண்டு நிகழ்த்த தீவிரவாதிகள் திட்டமிட்டி ருந்தனாராம். ஆனால் போட்டியை காண பிரான்ஸ் அதிபரும் வந்திருந்ததால்,பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், தீவிரவாதிகளின் நோக்கம் நிறைவேறவில்லை என்று கூறப்படுகிறது. ஒரு வேளை மைதானத்திற்குள் இது போன்று அசம்பாவிதம் நடந்தால்,கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கும். நெரிசலில் சிக்கி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பலியாகியிருப்பார்கள் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது

ad

ad