புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

14 நவ., 2015

மிஸ்டர். பீனின் 24 வருட திருமண வாழ்க்கை முறிந்தது

இங்கிலாந்தின் பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகரான ரோவன் அட்கின்சன் (60), தனது மனைவி சுனேத்ரா சாஸ்திரியை விவாகரத்து
செய்துள்ளார். இவர்களது 24 ஆண்டு திருமண வாழ்க்கை முறிந்தது ரோவனின் ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.

"மிஸ்டர்.பீன்" கதா பாத்திரத்தின் மூலம் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் ரோவன் அட்கின்சன். இவர், பி.பி.சி தொலைக்காட்சியில் மேக் அப் கலைஞராக பணிபுரிந்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனேத்ரா சாஸ்திரி என்பவரை கடந்த 1990ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லில்லி என்ற மகளும், பெஞ்சமின் என்று ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு (2014) பிப்ரவரி மாதம் விவாகரத்து கேட்டு இங்கிலாந்தின் சென்ட்ரலில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் ரோவன்.  ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 10ம் தேதி இருவருக்கும் விவாகரத்து வழங்கியுள்ளது நீதிமன்றம். இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட அன்று  இருவருமே நீதிமன்றத்துக்கு வரவில்லை.

இந்த தம்பதியினரின் விவாகரத்துக்கு 32 வயதுடைய லூயிஸ் ஃபோர்ட் என்ற இளம்பெண்ணுடன் ஏற்பட்டுள்ள காதலே காரணம் என்று கூறப்படுகிறது.

இப்படி ஒரு இளம் வயது பெண்ணினால், தன் திருமண வாழ்க்கை முறிந்து போனதை நினைத்து, சுனேத்ரா மிகுந்த வருத்தத்தில் உள்ளார்.