புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 நவ., 2015

தாக்குதலுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அனுதாபம்

பிரான்ஸ் பாரிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பொறுப்பை ஐ.எஸ் தீவிரவாதிகள் ஏற்று கொண்டுள்ளனர்.


அத்துடன் பிரான்ஸின் 3 நாட்களுக்கு துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, பிரான்ஸ் பாரிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது அனுதாபத்தை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி பிரன்க்குவா ஹோலன்டிற்கு அனுப்பியுள்ள கடிதத்திலே இந்த அனுதாபம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை தாம் வன்மையாக கண்டிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் சம்பவத்தில் பலியான மற்றும்
காயமடைந்தவர்களது குடும்பத்திற்கு அனுதாபத்தை தெரிவிப்பதற்காக இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களுடன் தாமும் இணைந்து கொள்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாத மற்றும் அடிப்படைவாதிகளை ஒழிக்க சர்வதேச சமுகம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது கடிதம் மூலம் வலயுறுத்தியுள்ளார்.

அத்துடன், பாரிஸ் நகர் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு தமது வருத்தத்தை தெரிவிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பிரான்ஸ் பிரதமர் மெனுவெல் வோல்ஸ_க்கு அனுப்பபட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை அறிந்ததும் தாம் அதிர்ச்சிக்கு உள்ளானதாக பிரதமர் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தில் பிரான்ஸ் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி ஒன்றிணைந்து செயற்படவுள்ளதாக அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் இலங்கையர்கள் யாரும் பாதிக்கப்பட்டுள்ளனரா? என்பது தொடர்பில் ஆய்வு செய்யப்படுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் பேச்சாளர் மகேசிக்கா கொலன்ன இதனை எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் உள்ள இலங்கையின் தூதரகம் அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சுடன் இதற்காக தொடர்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இதுவரையில் கிடைக்கப் பெற்ற தகவல்களின் படி, இந்த சம்பவத்தில் இலங்கையர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, பிரான்ஸில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் இலங்கையர்கள் யாரும் பாதிக்கப்பட்டுள்ளனரா? என்பது தொடர்பில் அறிவதற்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வெளிவிவகார அமைச்சு இதனைத் வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக பிரான்ஸில் உள்ள இலங்கை தூதுரக அலுவலகம் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விபரங்களை அறிய 003 36 20 50 52 32 மற்றும் 003 36 77 04 81 17 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ள முடியும்.

ad

ad